வவுனியா சிறுவர் துஸ்பிரயோகம் விகாராதிபதிக்கு எதிராக குவிகிறது குற்றச்சாட்டு - Sri Lanka Muslim

வவுனியா சிறுவர் துஸ்பிரயோகம் விகாராதிபதிக்கு எதிராக குவிகிறது குற்றச்சாட்டு

Contributors

வவுனியா, அட்டமஸ்கட பிரதேசத்திலுள்ள சிறுவர் இல்லத்திற்கு எதிராக மேலும் ஐந்து முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த முறைப்பாடுகள் வவுனியா சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு சேவைகள் நிலையத்தில் ஐந்து சிறுவர்களினால் மேற்கொள்ளப்பட்டு உள்ளது என நிலையத்தின் பெறுப்பதிகாரி தி. மனோகரராசா தெரிவித்தார்.

இந்த பகுதியில் கடந்த 2010ஆம் ஆண்டு முதல் இயங்கி வந்த சிறுவர் இல்லத்தின் விகாராதிபதியினால் சிறுவர்கள் துஷ்பிரயோகம் மேற்காள்ளப்பட்டதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையால் வவுனியா மாவட்ட நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனு விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டதை தொடர்ந்து விகாரதிபதிக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணைகள் நாளை செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் வரை விகாராதிபதி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் கடந்த 26ஆம் திகதி மேலும் ஒரு சிறுவன் தன்னை சிறுவர் இல்லத்தில் இரு

ந்த சிலர் தடிகளால் தாக்கியதாகவும் இதன் காரணமாக பலகையில் இருந்த ஆணி தனக்கு காயத்தை ஏற்படுத்தியமையால் தனக்கு தோல் நோய் ஏற்பட்டுள்ளதாக வவுனியா சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு சேவைகள் நிலையத்தில் முறைப்பாட்டை செய்திருந்ததுடன் வவுனியா பொலிஸிலும் முறைப்பாட்டை பதிவு செய்திருந்தார்.
அதனையடுத்து மேலும் 5 சிறுவர்கள் இன்று தமது பெற்றோருடன் வவுனியா சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு சேவைகள் நிலையத்திற்கு சென்று தமது முறைப்பாட்டை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.(j)

Web Design by Srilanka Muslims Web Team