வஸீலா ஸாஹிரின் “மொழியின் மரணம்” நூல் தமிழகத்தில் வெளியீடு » Sri Lanka Muslim

வஸீலா ஸாஹிரின் “மொழியின் மரணம்” நூல் தமிழகத்தில் வெளியீடு

v

Contributors
author image

M.S.M.ஸாகிர்

கவிஞர் ஈழவாணியின் ஏற்பாட்டில், பிரபல இலங்கை எழுத்தாளர் மினுவாங்கொடை வஸீலா ஸாஹிரின் இரண்டாவது படைப்பான “மொழியின் மரணம்” எனும் சிறுகதைத்தொகுதியின் வெளியீட்டு விழா டிசம்பர் 03ஆம் திகதி சனிக்கிழமை இந்தியாவில் வெளியிட்டு வைக்கப்படவுள்ளது.

இல – 06, இரண்டாவது பிரதான வீதி, CIT காலனி, மைலாப்பூர் எனும் இடத்தில் அமைந்துள்ள கவிக்கோ மன்றத்தில் மாலை 5 மணிக்கு இவ்விழா நடை பெறும்.
மூத்த எழுத்தாளர் பிரபஞ்சன் தலைமையில் இடம் பெறும் இவ்விழாவில், முதற் பிரதியை பேரா. கோவை மு.சரளா பெற்றுக் கொள்வதோடு, நூலை கவிஞர் சல்மா வெளியிட்டு வைக்கிறார்.

விழாவில், நூலின் அறிமுக உரையை “கல்கி” பத்திரிகையின் துணை ஆசிரியரான அமிர்தம் சூர்யா நிகழ்த்தவுள்ளார்.

ஆசிரியரின் முதல் நூலான “நிலவுக்குள் சில ரணங்கள்” எனும் சிறுகதைத்தொகுதி, கொழும்பு – ஸ்ரீ சங்கராஜ மாவத்தை, அல் -ஹிதாயா பாடசாலையில் அமைந்துள்ள எம். சீ. பஹார்தீன் மண்டபத்தில் அண்மையில் வெளியிட்டு வைக்கப்பட்டது அனைவரும் அறிந்ததே.

v

Web Design by The Design Lanka