வாக்குறுதியை நிறைவேற்றாமல் ஏமாற்றிய தலைவனை எதிர்த்து சாய்ந்தமருதில் இன்று பூரண ஹர்த்தால் » Sri Lanka Muslim

வாக்குறுதியை நிறைவேற்றாமல் ஏமாற்றிய தலைவனை எதிர்த்து சாய்ந்தமருதில் இன்று பூரண ஹர்த்தால்

27459260_878230369015257_1532209852392987024_n

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

ஏ.எல்.ஜுனைதீன்


முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் சாய்ந்தமருதுக்கு வருவதை எதிர்த்து அப்பிரதேசத்திலுள்ள மக்கள் ஹர்த்தால் அனுஸ்டிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சாய்ந்தமருது மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றாமல் சாய்ந்தமருதுக்கு அவர் வருகை தருவதை எதிர்த்து அங்குள்ள மக்கள் தங்கள் வர்த்தக நிலையங்கள் அனைத்தையும்  மூடியிருப்பதுடன் வீதியில்  கறுப்பு கொடிகளும் தொங்கவிடப்பட்டிருப்பதாகவும் அறிவிக்கப்படுகின்றது.

சாய்ந்தமருதில் இன்று 3 ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களின் பங்குபற்றுதலுடன் மாநாடு ஒன்றை நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மாண்புறும் சாய்ந்தமருது என்ற பெயரிட்டு எழுச்சி மாநாடு என்ற தொனியில் நடாத்தப்படவிருக்கும் இந்த மாநாட்டிற்கு அயல் கிராமங்களைச் சேர்ந்த மக்களை அழைத்துவரவும் திட்டம் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையிலேயே சாய்ந்தமருதில் வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டிருப்பதுடன் வீதியில்  கறுப்பு கொடிகளும் தொங்கவிடப்பட்டிருக்கிறது.

27331892_1588213937958689_4060824322273592964_n 27336282_1588213671292049_4392250291250094017_n 27459260_878230369015257_1532209852392987024_n 27459583_878230385681922_753097574513453716_n 27544707_1588213581292058_2075022674783354349_n 27545056_1588213711292045_1015488398373628381_n

Web Design by The Design Lanka