வாடகை அறவீடுகளில் விலைக்கழிவுவழங்க முன்வருமாறு எஸ்.எம்.சபீஸ் வேண்டுகோள்..! - Sri Lanka Muslim

வாடகை அறவீடுகளில் விலைக்கழிவுவழங்க முன்வருமாறு எஸ்.எம்.சபீஸ் வேண்டுகோள்..!

Contributors

நூருள் ஹுதா உமர்

வர்த்தக நிலையங்களை வாடகைக்கு வழங்கிய உரிமையாளர்கள் நாட்டின் தற்போதைய கொரோனா சூழ்நிலை கருதி விலைச் சலுகைகளை வழங்க முன்வர வேண்டுமென அக்கரைப்பற்று அனைத்துப்பள்ளிவாசல்கள் சம்மேளனத் தலைவர் எஸ்.எம்.சபீஸ் தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் மேலும் தெரிவித்ததாவது. உலகையே முடக்கி வைத்துள்ள கொரோனாவால் சகல இயல்பு நிலைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தப் பாதிப்புக்கள் ஏழை பணக்காரன் தொழிலாளி முதலாளி என அனைவரது பொருளாதாரத்தையும் வீழ்த்தியுள்ளது. வசதிபடைத்தோரால் இந்நிலைமையை எதிர்கொள்ள முடிந்தாலும் தொழிலாளர்கள் இதை எதிர்கொள்வதில் பெரும் சிரமங்களை அனுபவிப்பதையும் எம்மால் காண முடிகின்றது.

இந்நிலையில் வர்த்தக நிலையங்களை வாடகைக்கு வழங்கிய கட்டிட உரிமையாளர்கள் விலைக்கழிவுகள் அல்லது சலுகைகள் அடிப்படையில் வாடகைகளைப் பெற முன்வரவேண்டும் எனவும் அதன்மூலம் சமூகத்தில் தம்மால் முடியுமான உதவிகளை செய்தவர்களாக மாறிவிடுவோம் எனவும் எஸ்.எம்.சபீஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team