வாரம் ஒரு வட்டார ஆய்வு » Sri Lanka Muslim

வாரம் ஒரு வட்டார ஆய்வு

sainthamaruthu

Contributors
author image

Fahmy Mohideen

சமூகத்தை கூறுகளாக்கியதன் அருவடையை உள்ளூராட்சித் தேர்தல் மூலம் முஸ்லீம் தலமைகள் அனுபவிக்கலாம். குறிப்பாக SLMCகு சாய்ந்தமருது பெரும் தலையிடியாக வந்துள்ளது. SLMC கோட்டை,தலமையகம், அஷ்ரப் வாழ்ந்த மண்.SLMC கடந்த சகல மாநகரசபை தேர்தல்களிலும் வெற்றிகண்டது.

பதியப்பட்ட மொத்த வாக்குகள்: 68198

    A.R. Azmeer (2006-2006)
    H. M. M. Harees (2006-2009)
    S. Z. M. Mashoor Moulana (2009-2011)
    Siraz Meerasahib (2011-2013)
    Nizam Kariapper – (2014-2016)

கடந்த 2011ம் ஆண்டுத் தேர்தலில் 19 ஆசனங்களைப் பெற்று ஆட்சியமைத்தது.

இதில் சாய்ந்தமருது சுமார் 27000 வாக்குகளைக் கொண்டது.தங்களுக்கு தனியான சபை வேண்டும் என்ற கோரிக்கை பூகம்பமாகியது.இதன் விளைவாக பள்ளிவாசல் சார்பாக சுயேட்சைக் குழு களமிறங்கி உள்ளது.இதனால் எந்தக் கட்சிகளும் இந்தப் பிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரங்களை முன்னெடுக்க முடியாதளவு முடக்கப்பட்டுள்ளனர்.

புதிய தேர்தல் முறையின் வட்டார முறையின் கீழ் 22 வட்டாரங்கள்  பிரிக்கப்பட்டுள்ளது. ஆட்சியமைக்க குறைந்தது 12 ஆசனங்கள் தேவையாகும். .

இதில் 17-22 வரையான 6 உறுப்பினருக்குரிய வட்டாரம் சாய்ந்தமருதுக்குரியது.3&4 வட்டாரங்கள் தனியே மருதமுனைக்குரியது.11-16வரையிலான 6 வட்டாரங்கள் கல்முனைக்குரியது.எஞ்சிய 8 வட்டாரங்கள் தமிழ்பிரதேசங்களுக்கு உரியது.

சுருக்கமாக
14- முஸ்லீம் வட்டாரங்கள்
08-தழிழ் வட்டாரங்கள்

இந்த 14 வட்டாரங்களில் சாய்ந்தமருது 6 வட்டாரங்களை சுயேட்சை குழுமூலமாக வெற்றி பெறும். அதேபோன்று மருதமுனையில் 2 வட்டாரங்களும் அப்பிரதேச சுயேட்சை குழுவிற்கும் NFGGஇற்கும் பகிர்ந்தளிக்கப்படவே அதிகமான வாய்ப்புகள் உள்ளது. எஞ்சிய கல்முனைக்கான 6 வட்டாரங்களில் SLMC-5 ஐயும் ACMC-1ஐயும் வெற்றிபெறலாம்.

இந்த நிலையில் SLMC கல்முனை+மருதமுனை வட்டாரங்கள் முழுவதையும் வெற்றி பெற்றாலும் ஆட்சியமைக்க முடியாது. சாய்ந்தமருது 6 உறுப்பினர் ஆதரவு கட்டாயம் தேவையான இக்கட்டான நிலை உருவாகியுள்ளது.

இதனால் கிழக்கு மாகாணசபையில் போல TNA யுடன் சேர்ந்து ஆட்சியமைக்கும் வியூகத்தை வகுத்துள்ளது. இதற்காக வடகிழக்கில் சிலசபைகளின் ஆட்சியை TNAவிடம் ஒப்படைக்க தயாராகியுள்ளது. குறிப்பாக ACMCன் ஆட்சியமைக்கும் சந்தர்ப்பத்தை சிலசபைகளில்(மன்னார்+மட்டக்களப்பு) இல்லாது செய்ய இந்த உடன்பாடு காணப்பட்டுள்ளது.

கல்முனையை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டிய தேவை உள்ளது. இல்லாவிடின் கட்சிக்கும் தலமைக்கும் பாரிய நெருக்கடியை உருவாக்கும்.

ஆகவே முகநூளில் கிடைக்கும் Like, Comments களையும், கூட்டித்திரியும் வேறுவட்டாரத்து வாக்காளர்களை வைத்து கணிப்பீடுகளைச் செய்வது முன்பள்ளிச் சிறுவர்களின் விளையாட்டாகிவிட்டது.

Web Design by The Design Lanka