வாரியப்பொல பஸ் நிலைய “சண்டி கெல்லா“ பொலிஸாரையும் விட்டு வைக்கவில்லை! - Sri Lanka Muslim

வாரியப்பொல பஸ் நிலைய “சண்டி கெல்லா“ பொலிஸாரையும் விட்டு வைக்கவில்லை!

Contributors
author image

ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

வாரியப்பொல பஸ் நிலையத்தில் வைத்து ஆண் ஒருவரின் கன்னத்தில் சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாக அறைந்து கொண்டிருந்தார் எனக் கூறப்படும் “சன்டி கெல்லா” என்று அழைக்கப்படும் திலினி அமல்கா என்ற யுவதி பொலிஸாருக்கு எதிராக வழக்கு ஒன்றினைத் தாக்கல் செய்துள்ளார்.

 

தன்னைக் கைது செய்ததன் மூலம் தனது அடிப்படை மனித உரிமைகளைப் பொலிஸார் மீறி விட்டனர் என்று கூறியே அவர் இந்த வழக்கை தொக்கல் செய்துள்ளார். இது தொடர்பில் சிறுவர் மற்றும் மகளிர் தொடர்பான பிரிவுக்கும் அவர் முறைப்பாடு ஒன்றைச் செய்துள்ளார்.

 

இரத்மலான பிரதேசத்திலுள்ள ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் இந்த யுவதி வாரியப்பொல பஸ் நிலையத்தில் வைத்து ஆண் ஒருவரின் கன்னத்தில் சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாக அறைந்த நிலையில், பின்னர் அந்த ஆணின் காதுகள் பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

 

இதனையடுத்தே இந்தச் சண்டி கெல்லா பொலிஸாரல் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.

Web Design by Srilanka Muslims Web Team