வார இறுதியில் பயணக்கட்டுப்பாடு ? பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை..! - Sri Lanka Muslim

வார இறுதியில் பயணக்கட்டுப்பாடு ? பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை..!

Contributors

நாட்டின் பல பகுதிகளில் வீரியம் கொண்ட டெல்டா வைரஸ் தொற்று பரவி வருகின்றமையால் மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டுமென சுகாதார தரப்பினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் வார இறுதி நாட்களில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி மக்கள் செயற்படுவார்களேயானால், கடந்த காலங்களை போல மீண்டும் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

எனவே தேவையற்ற பயணங்களை தவிர்த்து, சுகாதார வழிமுறைகளை பின்பற்றி, வைரஸ் தாக்கத்திலிருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ளுமாறுஅவர் கேட்டுக் கொண்டுள்ளார்.  

Web Design by Srilanka Muslims Web Team