வாழைச்சேனை காவத்தமுனை பாடசாலையில் கொள்ளை: மூவர் கைது - Sri Lanka Muslim

வாழைச்சேனை காவத்தமுனை பாடசாலையில் கொள்ளை: மூவர் கைது

Contributors

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காவத்தமுனை அல் அமீன் வித்தியாலயத்தில் களவு போன கணனிகளையும் அச்சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் மூன்று சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளதாக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆர்.ஏ.பி.பெரேரா தெரிவித்தார்.

கடந்த நவம்பர் மாதம் 26ஆம் திகதி காவத்தமுனை அல் அமீன் வித்தியாலய கணனி அறை உடைக்கப்பட்டு கணனிகள் இரண்டு திருடப்பட்டதாக பாடசாலை நிருவாகத்தினரால் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய மட்டக்களப்பு மாவட்ட புலனாய்வுத் துறையினரின் தகவலின் படி கணனிகள் இரண்டும் சந்தேகநபர்கள் மூவரும் கைது செய்ய்பட்டுள்ளனர்.

வாழைச்சேனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் லாள் செனவிரத்னவின் ஆலோசனையில் பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர் மாயா ரன்ஜன் தலைமையில் சென்ற குழுவினரே கணனிகளையும் சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளனர்.

Web Design by Srilanka Muslims Web Team