வாழ்க்கை  செலவு அதிகரிப்பை தாங்கிக்கொள்ள முடியாத சாதாரண மற்றும் நடுத்தர குடும்பங்களை பற்றி அரசாங்கம் மிகவும் அலட்சிப்போக்கிள் நடக்கக்கூடாது..! - Sri Lanka Muslim

வாழ்க்கை  செலவு அதிகரிப்பை தாங்கிக்கொள்ள முடியாத சாதாரண மற்றும் நடுத்தர குடும்பங்களை பற்றி அரசாங்கம் மிகவும் அலட்சிப்போக்கிள் நடக்கக்கூடாது..!

Contributors

எப்.முபாரக் 

வாழ்க்கை  செலவு அதிகரிப்பை தாங்கிக்கொள்ள முடியாத சாதாரண மற்றும் நடுத்தர குடும்பங்களை பற்றி அரசாங்கம் மிகவும் அலட்சிப்போக்கிள் நடக்கக்கூடாது என தேசிய விடுதலை மக்கள் முண்ணனியின் தலைவர் முஸம்மில் மொஹிதீன் தெரிவித்தார்.

முள்ளிப்பொத்தானையில் அமைந்துள்ள கட்சியின் காரியாலயத்தில் வைத்து இன்று(25) மாலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்:

இன்று நாட்டில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெறுக்கடி காரணமாக அதிகமாக பாதிக்கப்படுபவர்கள் வருமை கோட்டின் கீழ் வாழும் குடும்பங்கள் மற்றும் நடுத்தர பொருளாதாரத்தை கொண்டுள்ளவர்களும்தான் செல்வந்தர்கள் ஏதோ ஒரு வகையில் சமாளிக்க கூடிய நிலைப்பாடு உள்ளது அதுவும் நாளடைவில்  தொடர்ச்சியான கொரோனா முடக்கம் ஏற்படுமானால் அவர்களின் நிலையை கூட கேள்விக்குறியாகும் என்பதில் சந்தேகம் இல்லை. 

இந்நிலையை தொடரவிடாது அரசாங்கம் ஒரு திட்டத்தை ஏற்பாடு செய்து அதனை அமுல்படுத்த வேண்டும். நாட்டிட்கு இறக்குமதி செய்யப்பட்ட முக்கியமான அத்தியவசியப்பொருட்களை  தடை செய்தால் மக்கள் மிகவும் அவதியுறும் நிலைக்கு தல்லப்பட்டுள்ளனர் என்பதை அரசாங்கம் விளக்கியும் அதை பொருட்படுத்தாது செயல்படுவது மிகவும்  கவலைக்குரிய விடயமே! 

அன்று 1977 ஆண்டுக்கு முதல் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க அன்றைய அரசாங்கம் வெளிநாட்டு இறக்குமதியை தடை செய்திருந்தது ஆனால் இந்த விடயத்தை எதிர்த்து 1978 ஆட்சிக்கு வந்த ஜே ஆர்  இன் ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட திறந்த பொருளாதார கொள்கையில் நூறு வீதம்  பழக்கப்பட்ட நமது நாடு தையல் ஊசியில் இருந்து தைத்த பெண்கள் அனைத்து ஆடைகளும்   இறக்குமதிசெய்தது. ஆனால் அதை இந்த அரசு உடனடியாக நிறுத்தி நம் நாட்டு உற்பத்தியை ஊக்கிவிக்கும் விடயம் சிறந்தது 

என்றாலும் ஒரே தடைவையில் அமுல்படுத்துவது சாத்தியமற்ற செயல் என்பதை விளக்கியும் பிடிவாத முறைமையை கையாள எத்தனிப்பது சிறந்த விடயம் அல்ல.

இதனால் நாட்டு மக்கள் தொடர்ச்சியாக தமது பொருளாதாரத்தில் பாரிய வீழ்ச்சி காண்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. தொடர்ச்சியாக வாழ்க்கை செலவு அதிகரிப்பதால் மக்கள் வருமை கோட்டிற்கு கீழ் தள்ளப்படுவார்கள். இவை அரசு சரிவர ஆராய்ந்து அது சம்பந்தப்பட்ட நிபுணத்துவம் வாய்ந்தவர்களை கொண்டு சில திட்டங்களை வகுக்க உடனடி ஏற்பாட்டை ஏற்பாடு செய்ய  வேண்டும் என்றார்.

Web Design by Srilanka Muslims Web Team