விகாரைகளுடன் இணைந்து செயற்படுங்கள் - ரணில் - Sri Lanka Muslim

விகாரைகளுடன் இணைந்து செயற்படுங்கள் – ரணில்

Contributors

அனைத்து தொகுதி அமைப்பாளர்களும் தங்களின் பிரதேசங்களில் உள்ள விகாரைகளுடன் இணைந்து செயற்பட வேண்டும் என்று, எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சிறிகொத்த கட்சி தலைமையகத்தில் இடம்பெற்ற தேசிய பிக்குகள் முன்னணி மற்றும் ஐக்கிய பிக்குகள் முன்னணி ஆகியவற்றின் மாநாட்டில் உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தொகுதி அமைப்பாளர்களின் ஒத்துழைப்பு போதுமானதாக அமையவில்லை என்று இதன் போது தேசிய பி;குகள் முன்னணி குற்றம் சுமத்தி இருந்தது.

எனினும் விகாரைகளுடன் இணைந்து செயற்படுவதன் ஊடாக பல்வேறு சிக்கல்களை தவிர்த்துக் கொள்ள முடியும் என்று ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.(sfm)

Web Design by Srilanka Muslims Web Team