விகாரையை சுற்றி நில அளவையாளர்கள் அளவீடு செய்ய முற்பட்டபோது பொதுமக்கள் கடும் எதிர்ப்பு . - Sri Lanka Muslim

விகாரையை சுற்றி நில அளவையாளர்கள் அளவீடு செய்ய முற்பட்டபோது பொதுமக்கள் கடும் எதிர்ப்பு .

Contributors

திருகோணமலை 64ஆம் கட்டை பகுதியில் உள்ள குட்டியாராம விகாரையை சுற்றி நில


அளவையாளர்கள் அளவீடு செய்ய முற்பட்டபோது பொதுமக்கள் கடும் எதிர்ப்பு


எப்.முபாரக்திருகோணமலை 64ஆம் கட்டை பகுதியில் உள்ள குட்டியாராம விகாரையை சுற்றி நில அளவையாளர்கள் நேற்று (18) மாலை அளவீடு செய்ய முற்பட்டபோது பொதுமக்கள் கடும் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 64ஆம் கட்டை பகுதியில் குட்டியாராம விகாரை மலை உச்சியில் அமைந்துள்ளது. அதனைச்சுற்றி மக்களுடைய காணிகள் இருப்பதாகவும் விகாரைக்கு 300 ஏக்கர் காணி தேவைப்படுவதாகக் கூறி வருவதாகவும் மக்கள் குறிப்பிடுகின்றனர்.இதன்போது குட்டியாராம விகாரையை சுற்றியுள்ள மலைப்பகுதியை அளவீடு செய்வதற்கு தங்களது விருப்பத்தை தெரியப்படுத்தி இருந்தபோதிலும் தாம் குடியிருந்து வரும் காணிகளையும் சுற்றி அளவீடு செய்ய முயற்சிப்பதாகவும் இதனால் தங்களுடைய எதிர்ப்பை வெளிப்படுத்துவதாகவும் மக்கள் தெரிவித்தனர்.இதனையடுத்து குறித்த இடத்துக்கு அளவீடு செய்ய வருகை தந்த நில அளவையாளர்கள் மீண்டும் திரும்பிச் சென்றதாகவும் சம்பவ இடத்துக்கு பொலிஸார் சென்று பார்வையிட்டவும் தெரியவருகின்றது.

Web Design by Srilanka Muslims Web Team