விசாரணை நடத்த இலங்கை மனித உரிமை ஆணைக்குழு தீர்மானம் - Sri Lanka Muslim

விசாரணை நடத்த இலங்கை மனித உரிமை ஆணைக்குழு தீர்மானம்

Contributors

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமைகள் மீறல் விசாரணைகளை பொதுநலவாய செயலகத்தின் தொழில்நுட்ப உதவியுடன் முன்னெடுக்கப்போவதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இந்த விசாரணைகளை தேசிய மட்டத்திலேயே நடத்த ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், பொதுநலவாய செயலகத்தின் மனித உரிமை பிரிவின் பிரதிநிதிகள் அடங்கிய தூதுக்குழுவினர் டிசெம்பர் 2 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

2009 ஆம் ஆண்டிலிருந்து 2013 ஆம் ஆண்டு இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலேயே முதலில் உள்ளகவிசாரணை நடத்தப்படவேண்டும் என்று இலங்கை மனித உரிமைகள் ஆணையாளர் பிரதீபா மஹாநாம தெரிவித்தார்.

தேசிய ரீதியிலான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதனையே பொதுநலவாயம் நம்புகின்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து ஆகிய நாடுகளும் தேசிய ரீதியிலான விசாரணைகளை விரும்புகின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார். tm

Web Design by Srilanka Muslims Web Team