விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு வழங்குபவர்கள் சட்ட ரீதியாக தண்டிக்கப்படுவர். கோத்தபாய. - Sri Lanka Muslim

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு வழங்குபவர்கள் சட்ட ரீதியாக தண்டிக்கப்படுவர். கோத்தபாய.

Contributors

புலிகள் இயக்கமானது தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பாகும் . இதற்கு ஆதரவு
தெரிவிப்பர்களுக்கு நாம் சட்டப்படியாக நடவடிக்கை எடுப்போம் . பயங்கரவாதிகளுக்காக முன்வருபவர்கள் பயங்கரவாதியாகவே கருதப்படுவார் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார் .
உள்ளூராட்சி சபை உறுப்பினர்களுக்கு புலிகளின் கல்லறைகள் மீண்டும் அமைக்க வேண்டும் என்பது தொடர்பாகவோ அல்லது பிரபாகரன் பற்றியோ பேசுவதற்கு எந்த அதிகாரமும் இல்லை . உள்ளூராட்சி மன்ற அரச உறுப்பினர்கள் மக்களுக்கு சேவை செய்யவே தெரிவு செய்யப்பட்டுள்ளனர் .
கல்லறைகள் அமைப்பதானது மக்களுக்கான சேவை இல்லை . அது தேவையற்றது . அதனை நாங்கள் ஒரு போதும் அனுமதிக்கமாட்டோம் . அவற்றை நாம் இலகுவாக அகற்றி விடுவோம் .
நாங்கள் 30 வருடங்களாக துயரப்பட்டுவிட்டோம் . இனி ஒருபோதும் அதற்கான சந்தர்ப்பத்தை வழங்க மாட்டோம் . காணிகளை பற்றி குறிப்பிடுவதானால் , இராணுவமுகாம்கள் எமது காணிகளில் அமைக்கப்பட்டுள்ளது . அவற்றில் அதிகமானவை அரச காணிகளாகும் . இராணுவத்திற்கு தேவையான இடங்களை அமெரிக்காவோ இங்கிலாந்தோ அல்லது வடக்கின் முதலமைச்சரோ தீர்மானிக்க முடியாது .
அதனை தீர்மானிக்க வேண்டியவர்கள் ஜனாதிபதி , பாதுகாப்புச் செயலாளர் அல்லது முப்படைத்தளபதிகள் மட்டுமே என கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார் .tn

Web Design by Srilanka Muslims Web Team