விண்வெளிக்குச் செல்லத்தக்க சிறப்பானதோர் இடம் இலங்கைதான் என்கிறது நாஸா நிறுவனம் - Sri Lanka Muslim

விண்வெளிக்குச் செல்லத்தக்க சிறப்பானதோர் இடம் இலங்கைதான் என்கிறது நாஸா நிறுவனம்

Contributors

எதிர்காலச் செயற்பாடுகளில் குறைந்த எரிபொருள் பாவனையுடன் விண்வெளிக்குச் செல்லத்தக்க சிறப்பானதோர் இடம் இலங்கைதான்  என நாஸா நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

இலங்கை தீவு ஒன்றாக இருப்பது அதற்கான சிறப்பான காரணங்களில் ஒன்றாகும்.

 

அதுமட்டுமன்றி சுற்றாடல் மற்றும் இந்த நாட்டின் அமைப்புப் போன்றவை விண்வெளி ரொக்கெட்களின் மையமொன்றை அமைப்பதற்கு பெரிதும் பொருத்தமானது என்றும் நாஸா நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

 

புயல்கள், சுழல் காற்றுக்கள் இல்லாதிருப்பதும் எப்போதுமே தெளிவான வான் பரப்பொன்றைக் கொண்டிருப்பதும் விண்வெளி ரொக்கெட் ஒன்றை விண்ணுக்கு ஏவும் போது எதிர்பாராத விதமாக வெடிப்பு ஏதும் நிகழுமானால் கடலில் விழும் நிலை காணப்படுவதால் இலங்கையின் அமைவிடம் பெரிதும் பாதுகாப்பானது என்றும் நாஸா அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.(LW)

Web Design by Srilanka Muslims Web Team