விண்வெளியில் ஹோட்டல் வரப்போகுது..! - Sri Lanka Muslim
Contributors

விண்வெளியில் ஆய்வு செய்வதற்காக ராக்கெட்டுகளையும், செயற்கைக்கோள்களையும், மற்ற உபகரணங்களையும் அனுப்புவதை பார்த்திருப்போம். ஆனால், விண்வெளியில் ஹோட்டல், பார், சினிமா தியேட்டர் ஆகியவையும் வரப்போகுதாம்.

2027ஆம் ஆண்டுக்குள் விண்வெளியில் ஹோட்டல் அமைக்க ஆர்பிடல் அசெம்ப்ளி கார்ப்பரேஷன் என்ற நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த விண்வெளி ஹோட்டலுக்கு வாயேஜர் என பெயரிடப்பட்டுள்ளது. இதில் 400 பேர் அமரும் வகையில் வடிவமைக்கப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான கட்டுமான பணிகள் 2025ஆம் ஆண்டு தொடங்கும்.

ஹோட்டல் மட்டுமல்லாமல் பார், சினிமா தியேட்டர், நூலகம், கச்சேரி அரங்கம், ஸ்பா, ஜிம் ஆகிய வசதிகளையும் அமைக்க ஆர்பிடல் அசெம்ப்ளி நிறுவனம் முடிவு செய்துள்ளது.மேற்கூறிய வசதிகளுடன், விண்வெளியில் இருந்துகொண்டு பூமியை ஜாலியாக கண்டு ரசிப்பதற்கான வசதிகளும் ஏற்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுழற்சி வேகத்தை அதிகரித்தும், குறைத்தும் செயற்கையான புவியீர்ப்பு விசையை உருவாக்கி இந்த ஹோட்டலை விண்வெளியில் மிதக்க விட திட்டமிடப்பட்டுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team