விபத்தில் காயமடைந்த பாடசாலை மாணவன் முகமது நிசாத் சிகிச்சை பலன் இன்றி உயிரிழப்பு » Sri Lanka Muslim

விபத்தில் காயமடைந்த பாடசாலை மாணவன் முகமது நிசாத் சிகிச்சை பலன் இன்றி உயிரிழப்பு

nn

Contributors
author image

Farook Sihan - Journalist

ஓஸ்மானியா அம்மா கடை பகுதியில் மோட்டார் சைக்கிள் மோதி காயங்களுக்கு உள்ளான பாடசாலை மாணவன் நேற்று முன்தினம் (13) சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாணம் போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.

கல்லூரிவீதி ஓஸ்மானியா பகுதியினை சேர்ந்த தரம் ஐந்தில் கல்வி கற்கும் இராஜன் முகமது நிசாத் வயது(10) என்ற பாடசாலை மாணவனே உயிரிழந்தவர் ஆவார்.

பிரஸ்தாப சிறுவன் கடந்த 9ம் திகதி இரவு 7:00 மணிக்கு மாங்காய் வாக்குவதற்காக அம்மா கடைப்பகுதிக்கு சென்றுள்ளான். வீதியின் கரையோரமாக நின்றுகொண்டிருந்த போது பொம்மைவெளிபகுதியில் இருந்து அதிவேகமாக வந்து மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் 15மீற்றர் தூரம் தூக்கிவீசப்படதில் வீதியோரமாய் நின்ற சிறுவனை மோதிதள்ளியது. தலையில் பலத்த காயங்களுக்கு உள்ளான சிறுவனை காப்பாற்றிய அப் பகுதி மக்கள் யாழ்போதனா வைத்தியசாலையில் சேர்பித்திருந்தனர்.

பின்னர் அவர் யாழ்ப்பாணத்தில் இருந்து மேலதிக சிகிச்கைகாக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் அங்கும் சிகிச்சை பலன் அளிக்காத நிலையில் மீண்டும் யாழ்ப்பாணத்திற்கு காவுவண்டியில் ) எடுத்து வந்துள்ளனர்.

எனினும் சிறுவன் நேற்று மதியம் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளதாக யாழ் பொலிஸார் தெரிவித்தனர். இறப்பு விசாரணைகளை வைத்தியசாலையின் திடிர் இறப்பு விசாரணை அலுவலர் நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

விபத்தினை ஏற்படுத்திய மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் 17வயதுடைய சிறுவன் என்றும்இ குறித்த நபருக்கு சாரதியனுமதிபத்திரம் உட்பட மோட்டார் சைக்கிளுக்கு எந்தவித ஆவணங்களும் இருந்திருக்கவில்லை என தெரிவிக்கப்பட்டது.

சிறுவர்களுக்கு பெற்றோர் மோட்டார் சைக்கிள் மற்றும் வாகனங்களை வழங்குதாலேயே அதிகளவு விபத்துக்கள் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. சாரதியனுமதிபத்திரம் இல்லாத நபர்களுக்கு வாகனங்களை வழங்குதல் சட்டப்படி குற்றம் என்பது குறிப்பிடத்தக்து

nn

Web Design by The Design Lanka