விமல் வீரவன்ச, உதய கம்பன்பில அவர்களே, உங்களுக்கு இப்போது செப்பத..? » Sri Lanka Muslim

விமல் வீரவன்ச, உதய கம்பன்பில அவர்களே, உங்களுக்கு இப்போது செப்பத..?

Contributors
author image

Editorial Team

இன்று (07.01.2021) எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் அவர்கள் தெரிவித்த கருத்துக்கள்.

கோவிட் தடுப்பூசி பற்றி அமைச்சரவையில் கருத்துக்கள் பரிமாறப்பட்டுக் கொண்டிருக்கும் தருனத்தில்,இந்திய வெளிவிகார அமைச்சர் இலங்கைக்கு வருகை தருவது முக்கியத்துவமில்லாமல் இல்லை.புதிய வருடத்தின் இந்தியாவின் முதலாவது இராஜதந்திர பயணத்திற்கு இலங்கையை தேர்வு செய்து செய்திருப்பது காரணம் இல்லாமல் இல்லை.இலங்கையில் ஏற்படும் உள்ளக அரசியல்,சமூக மற்றும் பொருளாதார விடயங்கள் குறித்து இந்திய எப்போதும் மிக உன்னிப்பாக அவதானித்த வன்னமுள்ளது என்பது நாங்கள் அறிந்த விடயம்.இந்திய வெளிவிவகார அமைச்சரின் பேச்சு வார்த்தை சுற்றுக்களை அவதானிக்கும் போது புலப்படும் ஒர் விடயம் தான் இலங்கை துறைமுக அதிகார சபைக்குரிய கொழும்பு துறை முகத்தின் கிழக்கு முனையம் விவகாரம் பற்றியதாகும்.ஆசிய அபிவிருத்தி வங்கியில் கடன் பெற்று அபிவிருத்தி செய்ப்பட்ட ஒர் பகுதி தான் கிழக்கு முனையம். அதைத்தான்இந்தியாவிற்கு  விற்பதற்கு முனைகின்றனர்.பாராளுமன்றத்தில் விற்பதில்லை என்று கூறுகின்றனர், ஆனால் இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு விற்பதற்கான கலந்துரையாடல்களும்,திட்ட வரைவுகளும் மேற்கொள்ளப்பட்டவன்னமுள்ளன.நூற்று 51% வீத பங்கை இலங்கைக்கு வைத்துக

 கொண்டாலும்,மிகுதிப் பெறுமானத்தை கொடுப்பது விற்பனையில்லையா? தனியார்மயபடுத்த மாட்டோம், தேசிய செத்துக்களைப் பாதுகாப்போம் விற்க மாட்டோம் என்று கூறி ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம் இந்தியாவிற்கு முன் மன்டியிட்டு விற்பதற்கான காரணம் என்ன என்று வினவுகிறோம்?.மூன்று வருட காலத்திற்குள் தேசிய முதலீட்டில் மொத்த இலாபங்களையும் தாங்கள்

பெற்றுத் தருவதாக துறைமுக அதிகார சபையின் ஊழியர் சங்க பிரதிநிதிகள் கூறுகின்றனர்.இந்த காரணங்களை விட்டு விட்டு இந்திய நிறுவனத்துடன் மேற்கொள்ள திட்டமிட்டுள்ள டீல் என்ன என்று வினவுகிறேன்.இதில் கிடைக்கும் கறுப்புப் பணம் யாருக்கு கிடைக்கப் பெறுகிறது என்று கேட்கிறோம்?எவ்வளவு தொகை கறுப்பு பணம்

கிடைக்கிறது என்று கேட்கிறோம்?இந்த அரசாங்கம் மக்களை ஏமாற்றி, ஊடக அடக்கு முறைகளை பிரயோகித்து கவனக் குறிப்புகளை திசை முகப்படுத்தி தங்கள் கறுப்புப் பண பைகளை நிறப்புவதற்கான ஏற்ப்பாடுகளைத் தான் இதன் மூலம் செய்து கொள்ளப் பாரக்கிறார்கள்.

இந்திய வெளி விவகார அமைச்சர் கிழக்கு முனையம் மற்றும் எல்.என்.ஜி உற்பத்தி நிலையம் தொடர்பான விவகாரங்களை கலந்துரையாடுவதாக நாங்கள் ஊடகங்களில் காண்கிறோம்.எல்.என்.ஜி உற்பத்தி நிலையத்தை விற்பதா? அல்லது குத்தகைக்கு விடுவதா ? என்ற விடயம் தெரியப்படுத்த வேண்டும்.எனவே என்ன விடயங்களை தாம் கலந்துரையாடது என்று அரசாங்கத்தின் பொறுப்பு வாய்ந்தவர்கள் அல்லது இலங்கையின் வெளி விவகார அமைச்சர் இது பற்றிய உன்மைகளை வெளிப்படுத்த வேண்டும்.

அருண பத்திரிகை யாருடையது என்று எல்லோருக்கும் தெரியும், அந்தப் பத்திரிகையின் இன்றைய நாளிதலில் “பிரிவினையற்ற இலங்கைக்குள் தமிழர் சமூகத்தின் எதிர்பார்புகள் நிறைவேற்றப்பட வேண்டும்” என்ற செய்தியை கானும் போது எனக்கு விமல் வீரவங்ச,உதய கம்பன்பில, கெவிது குமாரதுங்க போன்றவர்கள் எனக்கு ஞாபகம் வந்தனர்.இது குறித்து என்ன கூறப் போகிறார்கள்? அந்த செய்தியில் கூறப்படுவது 13 ஆவது திருத்தத்தை அவ்வாறே நிறைவேற்ற வேண்டும் என்று.இதன் மூலம் மாகாண சபைகளுக்கு பெலிஸ் அதிகாரம் மற்றும் இடம் தொடர்பான அதிகாரங்களை வழங்குமாறு கூறுகிறார். இந்திய வெளிவிகார அமைச்சர் இவ்வாறு கூறும் போது எமது வெளிவிவகார அமைச்சர் வாயை மூடிக்கொண்டிருந்தார்.இந்தியா இவ்வாறு தெரிவித்தாலும் நாங்கள

இதை எதிர்பதாக அல்லது அவ்வாறே நடைமுறைப்படுத்தப்படுத்தப் போகிறோமா? என்று இது தொடர்பாக வெளி விவகார அமைச்சர் தெளிவு படுத்த வேண்டும். விமல் வீரவங்ச அவர்களே, உதய கம்பன்பில அவரகளே, கெவிந்து குமாரதுங்க அவர்களே உங்களுக்கு இப்போது “செபத”(நல்லமா?) என்று வினவுகிறேன் என்று தெரிவித்தார்.

மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,கோவிட் விடத்தில் ஆச்சரியம் என்னவென்றால், அரசாங்கம் மாயைகளைக்கு பின்னால் செல்லும் 

 புராணத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, அதன் தலையை அறிவியலுக்கு திருப்பியுள்ளது.  உலகில

 எங்களையும் விட பொருளாதாரம் குன்றிய நாடுகள் கூட தடுப்பூசிகளைக் கொள்வணவு செய்து கொண்டிருக்கும் போது அகமது நாடு மாத்திரம் இன்னும் தடமாறிக் கொண்டுருக்கிறது.என்டிஜன் கொள்வனவில் கொமிஸ் அடித்தது போல் தடுப்பூசி கொள்வனவிலும் கொமிஸ் அடிப்பார்களோ என்ற சந்தேகம் எமக்குள்ளது.ஒக்ஸ்போட் தடுப்பூசிகளுக்கு பதிலாக இந்திய உற்ப்பத்தி தடுப்பூசிகளை பெறுவதற்கு முயற்சிப்பதில் இந்த மாபியா தெளிவாக புலப்படுகிறது.

அரசியல் அனுபவம் இல்லாத நிர்வாகம் இன்று நாட்டில்

 செயல்பாட்டில் உள்ளது என்றும் அவர் கூறினார்.அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை மீள எண்ணுவதற்கு ட்ரம் அரசாங்கம் பாரிய தடைகளை ஏற்படுத்திய வன்னமுள்ளனர். இதனை அடிப்படையாக்க் கொண்டு இன்று வரை ஐவர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.பிரயேக அரசியல் ஆட்சி தெரியாதவர்கள் அதிகாரங்களுக்கு வருவதால் ஏற்ப்பட்டுள்ள நிலை தான் இது.ஆட்சியை கொண்டு செல்ல முடியாமல் வெறியில் அமெரிக்க அரசு இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.இது போல் தான் எமது நாட்டிலும் இடம் பெறும்.

சிங்கள பல த்தத்தைப் பாதுகாக்க நியமிக்கப்பட்ட அரசு.  போர்வீரர்களால் ஆளப்படும் அரசாங்கம் என்று கூறி ஆட்சிக்கு வந்தவர்கள்.

போர் வீரர் ஒருவர் பாதுகாப்பு அமைச்சராக நியமித்து, இன்று மதிப்பிற்குரிய துறவிகள் கொல்லப்பட்டதன் பின்னணியில் உள்ள மறைமுக விடயங்களை நாட்டுக்கு உடனடியாக வெளிப்படுத்துமாறு போலீசாரிடம் வேண்டுகிறேன், எவ்வாறு ஓரு குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் இவ்வாறு தொடர்ச்சியாக கொலை செய்யப்பட் வன்னமுள்ளனர்.

சுற்றுலாத் துறையை கட்டியெழுப்ப உக்ரேனிய சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர்.உக்ரைன் நம்மை விட குறைந்த பொருளாதாரம் கொண்ட நாடு.அது உதயங்க வீரதுங்காவால் இறக்குமதி செய்யப்பட்ட கூட்டம்.சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் அனுப்பிய கடிதத்தைப் பார்க்கும்போது, ​​’உதயங்க வீரதுங்விற்கு எவ்வாறு இத்தகைய அதிகாரம் கிடைக்கிறது. இது யாருடைய பலம்?

கோடாபயவின் புகைப்படங்களை விமான நிலைய டோலிகளில் வைத்து காட்சிப்படுத்தி அவர்கள் வாக்களித்ததன் மூலம் கோதபயா ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது எங்களுக்கு நினைவிருக்கிறது.ஆனால் இன்று அவர்கள் நாட்டிற்கு வர முடியாதவர்களாக இருக்கின்றனர்.அதிக தொகை செலுத்த நிர்பந்திக்கப்பட்டுள்ளனர்.இந்த அதிக தொகை அறவீடுகள் தங்கள் கஜமித்துரு நண்பர்களுக்கு தான் கிடைக்கப் பெறுகிறது என்று தெரிவித்தார்.

Web Design by The Design Lanka