விமானத்தில் பறக்கும் போதும் தொலைபேசியில் உரையாடலாம்: அமெரிக்கா அதிரடி - Sri Lanka Muslim

விமானத்தில் பறக்கும் போதும் தொலைபேசியில் உரையாடலாம்: அமெரிக்கா அதிரடி

Contributors

விமானம் பறந்து கொண்டிருக்கும் போது தொலைபேசியில் உரையாடவும், இன்டர்நெட்டினை பயன்படுத்தவும் அனுமதிப்பது குறித்து அமெரிக்கா ஆலோசனை செய்து வருகிறது.

இது தொடர்பான அறிக்கையில், 3,048 மீட்டர் உயரத்திற்கு மேல் விமானம் பறக்கும் போது தொலைபேசி மற்றும் இன்டர்நெட் பயன்பாட்டை அனுமதிக்கலாம் என சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, அமெரிக்காவில் விரைவில், விமானம் பறக்கும் போது தொலைபேசியில் உரையாட விதிக்கப்பட்டுள்ள தடை விலக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும், விமானம் தரையிறங்கும் போதும் ஏறும் போதும் அதற்கான தடை நீடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team