விமானப் பயணிகளிடம் சுங்கத்திணைக்களம் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை! - Sri Lanka Muslim

விமானப் பயணிகளிடம் சுங்கத்திணைக்களம் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை!

Contributors

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் விமான நிலையம் அல்லது Unaccompanied Baggage(UPB) களஞ்சியம் ஊடாக தடை மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட பொருட்களையோ அல்லது தற்காலிகமாக தடை செய்யப்பட்ட பொருட்கள் அல்லது வணிகளவில் அடங்கும் பொருட்களை கொண்டு வருவதை தவிர்க்குமாறு இலங்கை சுங்கம் விமானப் பயணிகளுக்கு அறிவித்துள்ளது.

இந்த ஆலோசனையை பின்பற்ற தவறினால் சுங்கக் கட்டளை சட்டம் மற்றும் ஏற்றுமதி இறக்குமதி( கட்டுப்பாடு) சட்ட நெறிமுறைகளுக்கு அமைய அவ்வாறு சட்ட விரோதமாக கொண்டு வரப்படும் அனைத்து பொருட்களையும் அரசுடைமையாக்கவோ அல்லது அபராதம் விதிக்கவோ நடவடிக்கை எடுக்கப்படும்.

கடந்த காலங்களில் விமான பயணிகள் மூலம் அவர்களால் கொண்டுவரப்படும் பயண பொதிகள் மற்றும் பொருட்களை ஏற்றி இறக்கும் பல நிறுவனங்கள் (UPB)மூலம் அனுப்பப்படும் பொதிகளில் இறக்குமதிக்கு தடை செய்யப்பட்ட பொருட்களை கொண்டு வருவது அதிகரித்துள்ளதாக இலங்கை சுங்கம் அவதானித்துள்ளது. அவ்வாறான பொருட்களிடையே தங்கம், சிகரெட், மருந்து வகைகள், அலங்கார தாவரங்கள் போன்ற மட்டுப்படுத்தப்பட்ட பொருட்கள் மற்றும் நாட்டில் அன்னிய செலாவணி பிரச்சினை காரணமாக இறக்குமதி செய்வது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள பண்டங்கள் அடங்குவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சில பயணிகளால் சுங்க கட்டளை சட்டம் மற்றும் ஏற்றுமதி இறக்குமதி( கட்டுப்பாடு) சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள ஒழுங்கு முறைகள் மீறப்படும் ரீதியில் வர்த்தக அளவில் பொருட்கள் கொண்டுவரப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது.

 

Web Design by Srilanka Muslims Web Team