வியத்கம அமைப்பின் முக்கிய புள்ளி SJB யில் இணைந்தார்..! - Sri Lanka Muslim

வியத்கம அமைப்பின் முக்கிய புள்ளி SJB யில் இணைந்தார்..!

Contributors
author image

Editorial Team

ஓய்வுபெற்ற இராணுவ மேஜர் ஜெனரல் கலாநிதி பொனிபஸ் பெரேராவை, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஐக்கிய மக்கள் சக்தியின் அறிவார்ந்தோர் சபை மற்றும் தொழில்சார் நிபுணர்கள் சங்கத்தின் ஆலோசராக நியமித்துள்ளார்.

 

இலங்கை இராணுவத்தில் பொருளாதார அறிவியலில் கலாநிதி பட்டத்தை பெற்ற முதல் அதிகாரியான பொனிபஸ் பெரோா, மனிதவள முகாமைத்துவம், உயர் பாதுகாப்பு முகாமைத்துவம் ஆகியவற்றில் டிப்ளோமா பட்டங்களை பெற்றுள்ளார். அத்துடன் இராணுவ கல்லூரி மற்றும் சீன தேசிய பாதுகாப்பு கல்லூரி ஆகியவற்றிலும் பட்டங்களை பெற்றுள்ளார்.

இதனை தவிர இலங்கை இராணுவத்தினருக்கு வழங்கப்படும் ரணசூர, ரணவிக்ரம பதக்கங்களை பெற்றுள்ள அவருக்கு இராணுவ ஒழுக்கத்தை பின்பற்றியமைக்கான உத்தம சேவா பதக்கம் உட்பட 12 பதக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.

மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா சஜித்துடன் இணைந்தார்

மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் இணைந்து கொண்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்திக்கு தமது ஆதரவினை வழங்குவதாக அவர் அறிவித்துள்ளார்.

மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா வன்னிக் கட்டளைத் தளபதியாக கடமையாற்றியிருந்தார் என்பதுடன், பிரதம பாதுகாப்பு அதிகாரியாவும் கடயைமாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொனிபஸ் பெரேரா, கடந்த ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு பூரண ஆதரவினை வழங்கி பிரச்சாரங்களில் ஈடுபட்டிருந்தார் என்பதுடன், அவர் வியத்மக என்ற அமைப்பின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team