வியாபார அரசியல் நடாத்துபவர்களுக்கு உள்ளுராட்சி தேர்தல் நல்ல பாடமாக அமையும்-சமூக சேவகர் கே.எம் நிலாம் » Sri Lanka Muslim

வியாபார அரசியல் நடாத்துபவர்களுக்கு உள்ளுராட்சி தேர்தல் நல்ல பாடமாக அமையும்-சமூக சேவகர் கே.எம் நிலாம்

DSCF7560

Contributors
author image

Farook Sihan - Journalist

எமது யாழ் முஸ்லீம்களின் வாழ்வுரிமை பறிப்பதற்காக அரசியல் வியாபாரங்களை தற்போது செய்துவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு  மக்கள் எதிர்வரும்  உள்ளுராட்சி தேர்தலில் நல்ல பாடத்தை  கற்பிப்பார்கள்  என சமூக சேவகர் கே.எம் நிலாம் தெரிவித்தார்.

தற்போது மக்கள் சந்திப்புக்களை மேற்கொண்ட நிலையில் மேற்கண்டவாறு தனது கருத்தை தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்

எதிர்வரும் யாழ் மாநகர சபை தேர்தலில் 13 ஆம் வட்டாரத்தில் வேட்பாளராக ஐக்கிய தேசிய கட்சி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கூட்டணியில் இணைந்து எமது மக்களின் வாழ்வுரிமை  பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக  இம்முறை நடைபெறவுள்ள தேர்தலில் போட்டி இடுகின்றேன்.

ஆனால் எமது வட்டார மக்களை தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்ந்தவர்கள் பசப்பு வார்த்தைகளை கூறி பணம் கொடுத்து திசைதிருப்ப பார்க்கின்றனர்.இந்த ஏமாற்று  நடவடிக்கைகளை மக்கள் யாவரும் அறிந்து எமது கடந்த கால இன்னல்களை சற்று நினைத்து பார்த்தால் இவர்களது சுயரூபம் தெரியவரும்.

இது தவிர யாழ் முஸ்லீம் மக்கள் தன்மானத்துடன் வாழ்வதற்கு எமது தலைவர் அமைச்சர் றிசாட் பதியுதீன் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

எனவே தான் மக்களாகிய நீங்கள் என்னை எமது கட்சியை ஆதரித்து எமது பிரதேச அபிவிருத்தியை ஊக்கப்படுத்த வேண்டும்.
அத்துடன் உங்கள் வாக்குகளை பணத்தினால் வாங்கி வெற்றி பெறலாம் என சிலர் நினைக்கின்றார்கள் .அவர்கள் சிலருக்கு கூட வட பகுதியில் வாக்குரிமையே கிடையாது.

இவ்வாறானவர்கள் எப்படி மக்களிடம்  சேவை செய்கின்றோம் என கூறுவது என்பது வேடிக்கையாக உள்ளது.
எனவே எதிர்வரும் தேர்தலில் எமது  வாழ்வுரிமை பறிப்பதற்காக அரசியல் வியாபாரங்களை தற்போது செய்துவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு  தக்க பதிலடி மக்கள் வழங்குவார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Web Design by The Design Lanka