விரைவாக 26 சதம்: விராட் கோலியின் உலக சாதனையை முறியடித்தார் ஹசிம் அம்லா » Sri Lanka Muslim

விரைவாக 26 சதம்: விராட் கோலியின் உலக சாதனையை முறியடித்தார் ஹசிம் அம்லா

amla

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்


தென்ஆப்பிரிக்கா அணியின் ஹசிம் அம்லா ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விரைவாக 26 சதங்கள் அடித்து விராட் கோலியின் உலக சாதனையை முறியடித்துள்ளார்.

தென்ஆப்பிரிக்கா – வங்காள தேசம் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று கிம்பெர்லே டைமண்ட் ஓவல் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த வங்காள தேசம் 50 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பிற்கு 278 ரன்கள் சேர்த்தது. முஷ்பிகுர் ரஹிம் சிறப்பாக விளையாடி 116 பந்தில் 11 பவுண்டரி, 2 சிக்சருடன் 110 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். தென்ஆப்பிரிக்கா அணியின் ரபாடா அதிகபட்சமாக 4 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

பின்னர் 279 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்கா அணியின் ஹசிம் அம்லா, குயிண்டான் டி காக் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.

வங்காள தேசத்தை சேர்ந்த 7 பேர் பந்து வீசினார். இருந்தாலும் இந்த ஜோடியை பிரிக்க முடியவில்லை. இருவரும் சதம் அடித்ததோடு கடைசி வரை நிலைத்து நின்று அணியை வெற்றி பெற வைத்தார்கள். தென்ஆப்பிரிக்கா 42.5 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 282 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்தய போட்டியில் ஹசிம் அம்லா அடித்த சதம், அவரின் 26-வது சதமாகும். இதன்மூலம் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிக சதம் அடித்த வீரர் என்ற விராட் கோலியின் உலக
சாதனையை முறியடித்துள்ளார். விராட் கோலி 166 இன்னிங்சில் 26 சதமும், தெண்டுல்கர் 247 இன்னிங்சில் 26 சதமும், ரிக்கி பாண்டிங் 286 இன்னிங்சில் 26 சதமும் அடித்தள்ளனர்.

ஹசிம் அம்லா 157 போட்டியில் 154 இன்னிங்ஸ் மூலம் இந்த சாதனையை படைத்துள்ளார்.

amla

Web Design by The Design Lanka