விரைவில் அமைச்சரவை மாற்றம்! - Sri Lanka Muslim
Contributors

எதிர்வரும் காலங்களில் அமைச்சரவையில் மாற்றம் ஏற்படுத்தப்படவுள்ளதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சரவை மாற்றம் விரைவில் நடைபெறவுள்ளது. மறுசீரமைப்பு என்பது அத்தியாவசியமானதாகும். இந்தநிலையில், எஸ்.எம் சந்திரசேனவுக்கு அமைச்சு பதவி கிடைக்குமா என அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அவர், அநுராதபுரத்தில் 4 தடவைகள் தேர்தலில் முதல்நிலையில் தெரிவாகியுள்ளதாக தெரிவித்தார். இதனடிப்படையில் தாம் அமைச்சு பதவிக்கு தகுதியானவர் என்ற போதிலும் அமைச்சு பதவி கிடைக்க வாய்ப்பில்லை என தெரிவித்தார்.

Web Design by Srilanka Muslims Web Team