விவாகரத்தாகி வருகிற திருமணங்கள் » Sri Lanka Muslim

விவாகரத்தாகி வருகிற திருமணங்கள்

wedding in sa

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

-முஹம்மது ராஜி-


ஆடம்பரமாக செய்யப்படுகிற திருமணங்கள் நீண்ட காலத்துக்கு நிலைக்காமல் அதே வேகத்தில் உடைந்து போய் விடுகிறது என்பது நமது கண்களுக்கு முன்னால் காணுகின்ற எத்தனை நிஜம் ..?

கண்ணுக்கு முன்னால் இவ்வாறு பலவற்றை கண்டு களைத்தபோதும் இதே தவறை மீணடும் மீண்டும் சமுகம் செய்கிறதே தவிர திருந்துவதாக தெரியவில்லை ..

சாதாரண குடிமகன் முதல் சர்வதேச புகழ் நபர்கள் வரை இதில் அகப்பட்டு சிக்கிச் சின்னாபின்னமாகி விடுகிறார்கள் .

உலக புகழ் பெற்ற குத்துச்சண்டை வீரர் அமீர் கானின் திருமணம் இப்போது முறிவடைந்துள்ளதுடன் கணவன் மனைவி அந்தரங்கம் ட்விட்டரில் மேடை ஏறிக்கொண்டு இருப்பதுடன் உலகமே எள்ளி நகையாடுகிற நிலைக்கு திருமண பந்தம் நாறிக்கொண்டு இருக்கின்றது.

2013 இல் நியூயோக்கில் தடல் புடலாக மிகவும் ஆடம்பரமாக நடைபெற்ற அந்த திருமணத்துக்கு இன்னமும் ஐந்து வருடங்கள் கூட முழுதே ஆகாத நிலையில் விவகாரத்தின் வாசலுக்கு வந்து நிற்கிறது அது .

வறுமையானவன் தானும் சளைத்தவன் இல்லை என கடன் வாங்கி ஆடம்பர திருமணத்தை நடத்துகிறான் . வசதியானவன் தன் அந்தஸ்தை நிலைநிறுத்த ஆடம்பரமாக திருமணத்தை நடத்துகிறான் .

எப்போது திருந்தப்போகிறது இந்த சமுகம் ?

கண்மணி நாயகம் (ஸல் )கூறியது பொய்யாகுமா.. ?
மிகவும் ஆசிர்வதிக்கப்பட்ட திருமணம் மிகவும் குறைந்த செலவில் செய்யப்படுகின்ற திருமணமே ‘

Web Design by The Design Lanka