விவேக்கின் ரசிகர்கள் மரம் நட்டு அவருக்கு அஞ்சலி செலுத்துவதே அந்த கலைஞருக்கு வழங்கும் கௌரவம் : மீஸான் ஸ்ரீலங்கா இரங்கல். - Sri Lanka Muslim

விவேக்கின் ரசிகர்கள் மரம் நட்டு அவருக்கு அஞ்சலி செலுத்துவதே அந்த கலைஞருக்கு வழங்கும் கௌரவம் : மீஸான் ஸ்ரீலங்கா இரங்கல்.

Contributors

தென்னிந்திய திரைப்பட நடிகராக மட்டுமில்லாது மறைந்த இந்திய ஜனாதிபதி  விஞ்ஞானி டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்களின் நேரடி வாரிசு போன்று செயற்பட்டு அன்னாரால் தமக்கு வழங்கப்பட்ட மரநடுகை வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக மேற்கொண்டிருந்த சின்னக்கலைவாணர் பத்மஸ்ரீ டாக்டர் விவேக் அவர்களின் மரணச்செய்தி இயற்கையின் காதலர்களையும், திரைப்பட ரசிகர்களையும் மிகப்பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அன்னாரின் இழப்பு இயற்கைக்கு கிடைத்த தோல்வியாகவே நோக்க முடிகிறது என அல்- மீஸான் பௌண்டஷன், ஸ்ரீலங்கா விடுத்துள்ள அனுதாப செய்தியில் தெரிவித்துள்ளனர்.

மேலும் அந்த அனுதாப செய்தியில், இந்தியாவின் அணு நாயகனாக விளங்கும் முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே. அப்துல்கலாமின் நேரடி சிஷ்யன் இவர். இவரை அண்மையில் பாராட்டி கௌரவிக்கும் வாய்ப்பை நாங்கள் பெற்றிருந்தோம். அந்த சந்திப்பின் போது அவர் இயற்கை மீது கொண்டிருந்த பற்றையும், கௌரவத்தையும் எங்களால் உணர முடிந்தது. கலைஞர் விவேக் மரணித்தாலும் அவரின் நகைச்சுவைகளுக்கு என்றும் மரணம் இல்லை. இவரின் நகைச்சுவை பகுத்தறிவு கொண்டவை. இனி பகுத்தறிவுக்கு திரையுலகில் பஞ்சம் ஏற்படும் என்பதே உண்மை.

ஒரு கோடி மரம் நடும் திட்டத்தை இவர் முன்னெடுத்திருந்தார். மரம் நாடும் பணியை வெற்றிகரமாக முன்னெடுத்த இவரின் இலக்கை அடைய இவரின் சகல ரசிகர்களும், அபிமானிகளும் மரம் நடும் பணியை செய்வதே இவருக்கு வழங்கும் உயரிய மரியாதையாக இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.

ஊடக பிரிவின் வெளியீடு

Web Design by Srilanka Muslims Web Team