விஷ எண்ணெய்;CID சென்ற சஜித் அணி எம்.பி - Sri Lanka Muslim
Contributors

புற்றுநோயை ஏற்படுத்தும் தேங்காய் எண்ணெய் இறக்குமதி செய்ததாகக் கூறப்படுவது குறித்து உடனடியாக விசாரணை நடத்தவும் தேவையான சட்ட நடவடிக்கையை எடுக்கவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜெயவர்தன கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் இன்று பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பில் முழு விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், தரமற்ற தேங்காய் எண்ணெய் இறக்குமதியில் ஈடுபட்டவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் எம்.பி. தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team