வீடொன்றில் அடைக்கப்பட்ட 3 சிறுமியர் மீட்பு - Sri Lanka Muslim

வீடொன்றில் அடைக்கப்பட்ட 3 சிறுமியர் மீட்பு

Contributors

வீடொன்றுக்குள் அடைக்கப்பட்டிருந்த மூன்று சிறுமிகள் பொலிஸாரால் மீட்கப்பட்ட சம்பவமொன்று பட்டபொல, கிரிமெட்டிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

பெற்றோர் அற்ற நிலையில் குறித்த சிறுமிகள் மூவரும் வீட்டுக்குள் அடைக்கப்பட்டிருப்பதாக பொலிஸ் அவசர அழைப்புக்கு கிடைத்த முறைப்பாட்டை அடுத்தே இச்சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

7 வயது, 5 வயது மற்றும் ஒன்றரை வயதுடைய மூன்று சிறுசமிகளே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளனர். இவர்களது பெற்றோர்களை தேடும் பணிகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை, சுமார் ஒரு நாள் தனிமையில் இருந்த இச்சிறுமியரை காலி, கிதுலம்பிட்டிய சிறுவர் இல்லத்தில் ஒப்படைத்து பராமரிக்குமாறு பலபிட்டிய நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

babybaby1

Web Design by Srilanka Muslims Web Team