வீட்டினுள் 'பங்கர்' ஒன்றை அமைத்து ஒளிந்து வாழ்ந்த பாதாள உலக நபர் கைது. - Sri Lanka Muslim

வீட்டினுள் ‘பங்கர்’ ஒன்றை அமைத்து ஒளிந்து வாழ்ந்த பாதாள உலக நபர் கைது.

Contributors


இன்று காலை விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட சுற்றி வளைப்பில், முல்லேறியா பிரதேசத்தில் இருந்து சரத் குமார எனப்படும் 44 வயது சீட்டி என்ற நபர் கைது செய்யப் பட்டுள்ளார்.

இந்தியாவில் உயிரிழந்ததாக கூறப்படும் அங்கோட லொக்காவின் முதல் அடியாளாக செயல் பட்டு வந்ததுடன் பல குற்றச் செயல்கள் தொடர்பில் இவர் தேடப்பட்டு வந்தவர்.

காவல்துறையிடம் இருந்து தப்பித்து கொள்ள வீட்டினுள் பங்கர் ஒன்றை அமைத்து ஒளிந்து வாழ்ந்த இவர் இன்று காலை கைது செய்யப்பட்டு உள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team