வீதியை கடக்க முற்பட்ட மூதாட்டி மோட்டர் சைக்கிள் மோதி பலி: இக்பால் நகரில் சம்பவம் » Sri Lanka Muslim

வீதியை கடக்க முற்பட்ட மூதாட்டி மோட்டர் சைக்கிள் மோதி பலி: இக்பால் நகரில் சம்பவம்

die6

Contributors
author image

ரபாய்டீன் பாபு ஏ .லத்தீப்

நிலாவெளி பிரதான வீதி இக்பால் நகர் பொலிஸ் நிலையத்துக்கண்மையில்  திங்கள் இரவு 7.30 மணியலவில் மூதட்டி ஒருவர் வீதியை கடந்து சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த மோட்டர் சைக்கிளில் மோதுண்டு காணுக்குள் தூக்கி வீசப்பட்டார்.

மோட்டர் சைக்கிளில் பயணித்தவர்கள் தப்பி ஓடி அண்மையிலுள்ள பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தனர். சம்பவத்தை கண்ட அயலவர்கள்பலத்த காயத்துக்குள்ளான மூதாட்டியை நிலாவெளி வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்ற போதும் அவரது உயிர் பிரிந்து விட்டது .

இவ்வாறு உயிரிழந்தவர் நிலா வெளி இக்பால் நகரை ேசர்ந்த அப்துல் ஹமிட் சாயிதா உம்மா வயது 76 ஒன்பது பிள்ளைகளின் தாய்.

ேமாட்டர் சைக்கிளில் பயணித்த இருவரில் ஒருவர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ெபாலிஸாரரல் கைது செய்யப்பட்டுள்ளார் .

இவர்கள் போதையில் பயணித்தார்களா என பொலிஸார் விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர்.

ஊரவர்கள் ஒன்று திரண்டு நிலாவெளி பொலிஸ் நிலையத்தை முற்றுகை இட்ட போது சற்று ேநரம்ப அங்கு பதட்ட நிலை காணப்பபட்டது.

Web Design by The Design Lanka