"வெட கரன ரடே நபே விருவா" பாடலைக் கேட்டு 69 இலட்சம் மக்கள் ஏமாந்துள்ளனர்..! » Sri Lanka Muslim

“வெட கரன ரடே நபே விருவா” பாடலைக் கேட்டு 69 இலட்சம் மக்கள் ஏமாந்துள்ளனர்..!

Contributors
author image

Editorial Team

இன்று(27) எதுல் கோட்டையிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை செயலகத்தில் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னான்டே தெரிவித்த கருத்துக்கள்.
இன்று ரஞ்சனை சிறைச்சாலை இடமாற்றத்திற்கு உட்படுத்துகின்றனர், இதனைக் கருத்திற் கொண்டு கறுப்புப் பட்டி அனிந்து இன்று இச்சந்திப்பை மேற்கொள்கின்றேன். ரஞ்சனை பார்வையிட திலிப் ஐயவீர பாராளுமன்ற உறுப்பினர் சென்றிருந்தார் என்றாலும் அவருக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்க வில்லை. பாராளுமன்ற உறுப்பினருக்குரிய வரப்பிரசாதத்தை சிறைச் சாலை அதிகாரிகளால் தடுக்க முடியாது.

ஊடகவியலாளர்களுக்கு மரியாதை கருதி தங்கள் நேரங்களையும் கருத்திற் கொண்டு ஊடக சந்திப்பின் நேரங்களையும் கருத்திற் கொண்டு மொத்த நேரங்களை 30 நிமிடங்களாக குறைத்து ஊடக சந்திப்பை நடத்துபவர்களுக்கு 15 நிமிடங்களும், கேள்விகளை விடுக்க ஊடகவியலாளர்களுக்கு 15 நிமிடங்களுமாக நின்ற நிலையில் இந் சந்திப்பை ஏற்பாடு செய்துள்ளோம்.கட்சியின் புதிய ஊடகப் பேச்சாளர்களான மரிக்காரும் மனுஷவும் இந்த வேலைத் திட்டங்களை முன்னெடுப்பார்கள்.
”வெட கரன ரடே நபே விருவா
மவ் பிமட பெமின் செமதா
ரட ரகின கெனெக் வெனம் ஏ ஒபை உதும் மினிசா
விது நென பலென் லொவ பொரதென மினிஸ் பவ்ர சதன
ரட தெய சந்தா
மவித கரன்னட
துரதெக்மென் சிதனா
பிய செக நெதி
யுகயக் மவ
நெவும் ஹெடக் கெனனா
வென கெனெக் நெதி
ஒப ஹெர அபே
அனாகத்தயே சதனா”
இந்த பாடலைக் கேட்டு 69 இலட்சம் மக்களை ஏமாந்து விட்டனர். கேட்டாவின் வெளிவிவகார கொள்கை மேசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசு இந்தியாவிற்கு அனுப்பிய தூதுவரை அந்த அரசு ஏற்பதாக இல்லை. கனடா அரசும் இலங்கைத் தூதுவரை இன்னும் ஏற்க வில்லை. வெளிவிவகார கொள்கை விடயத்தில் இரண்டு மடங்கு பின்னடைவை சந்தித்துள்ளனர்.
160 பேரின் இடமாற்றம் தொடர்பாக நான் பாராளுமன்றத்தில் பேசியிருந்தேன். இது குறித்து ஜனாதிபதிக்கு நன்றி செலுத்துகின்றோம். கருத்துச் சுதந்திரத்திற்கு இன்று இடமில்லை. எனக்கு ஏற்படுத்திய தடையை மாயையைக் கொண்டு இல்லாமல் விஞ்ஞான பூர்வமாக பதிலளித்துள்ளேன். இன்று வெட கரன விருவாவின் விடயங்கள் குறித்து சமூக ஊடகங்களில் மேசமான முறையில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.
கிழக்கு முனையம் குறித்து துறைமுக பனிப்பாளர் சபைக்கு மாற்று வழி குறித்து அறிவிக்குமாறு கூறப்பட்டது. அவர்களும் இதற்கு சாதகமாக பதிலளிக்க வில்லை. அவர்களும் இந்தியாவிற்கு வழங்கும் நிலைப்பாட்டில் தான் இருக்கிறார்கள். நல்லாட்சி அரசாங்கத்தில் இந்த விடயம் தெளிவாக கூறப்பட்டே நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது.
முந்தரா துறைமுகத்தை அபிவிருத்தி செய்து இலங்கையின் ஜேசிடி முனையை உபாயமற்றதாக ஆக்குவதுதான் அதானியின் நிலைப்பாடாகும்.
இது தான் எங்களுக்குரிய பிரச்சிணை.உபாயமிக்க இந்த முனையம் இல்லாமல் போனால் நாட்டிற்கு வருமானம் இல்லை. இதனால் ஏற்றுமதித் தொழித் துறை மற்றும் அது சார்ந்த வருமனமும் இல்லாமல் போகும் அபாயத்தை இங்கு சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக வெளி விவகார விடயம் பாரிய பின்னடைவுக்குச் சென்றுள்ளது.
கொவிட் 19 தெற்றினால் பாதிக்கப்ட்ட பவித்ரா உட்பட ஏனைய அமைச்சர்கள் துரிதமாக சுகமடைய பிரார்திக்கிறோம். நாங்கள் ஆரம்பம் முதல் பல விடயங்களை தர்க்க ரீதியாக முன்வைத்தோம்.
54 நபர்களைக் கொண்டு எதிர்க் கட்சியால் முடியுமான வேலைத் திட்டங்களை முன்னெடுத்தோம். சகலதற்கும் முகம் கொடுத்தோம். கொவிட் குறித்து பாராளுமன்றத்தில் சஜித் பிரேமதாச கூறிய போது அவரை பலர் இழிவுபடுத்தினர். பவித்ரா நகைப்பு கிடமாக பேசினார்.இதன் பிறகு சரி விஞ்ஞான ரீதியாக பதிலளிக்க முயற்சி செய்யுங்கள்.தடுப்பூசி இந்த நாளையிலும் இங்கு வராது.
எந்த விமர்சனமும் இல்லாத நல்ல நபர்களைக் கொண்ட புதிய குழு நியமிக்கப்பட்டுள்ளது. மக்களின் ஒற்றுமையை இலக்காக்க் கொண்டு புதிய கட்சி புதிய பயணம் ஒன்றை முன் கொண்டு செல்லுவோம்.இன்று பலரும் இதில் இனைந்த வன்னமுள்ளனர்.இது ஒற்றுமையின் கட்சி என்று ஐக்கிய மக்கள் சக்தி குறித்து கூறினார்.
வியத் மக வீழ்ச்சி கண்டு விட்டது.தோற்று விட்டது.புதிய அரசியல் சிந்தனை நாட்டுக்கு தேவைப்டுகிறது. குடும்பத்தை இலக்காக் கொண்ட கோத்திர குறுகிய அரசியல் கலாசாரம் இல்லாமல் ஆக்கப்பட வேண்டும்.
இலவச கல்வியில் படித்த நடுத்தர மக்களும் தங்கள் ஆளுமையால் முன்னுக்கு வர முடியுமான அரசியல் கலாசாரம் உருவாக்கப்படவேண்டும்.
சிறைச்சாலையில் மரணித்தவர்கள் விடயத்தில் இன்று ஒன்றும் இல்லை.நீதி அவர்களுக்கு கிடைத்ததாக தெரியவில்லை.
வீடியோ :
https://www.youtube.com/watch?v=gWA-9uteTXE&feature=youtu.be

Web Design by Srilanka Muslims Web Team