வெண்மையான பற்களை பராமரிப்பது எப்படி ? - Sri Lanka Muslim
Contributors

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ என்பது பழமொழி. முகத்தின் அழகு பற்களில் தெரியும் என்பது அனைவருக்கும் ஏற்ற மொழி.

 

முப்பத்திரண்டு பற்களும் சேர்ந்து தான் உங்கள் முகத்தின் அமைப்பை முழுமைப்படுத்தும் தூண்கள் என்பதை சொல்லித் தான் தெரிந்து கொள்ள வேண்டுமா! இந்த பற்களை பாதுகாப்பது தொடர்பான விளம்பரங்கள், விதவிதமான டூத் பேஸ்ட், பாதுகாப்பு லோஷன்கள் என தினசரி விளம்பரங்களை பார்க்காமல் நமது நாட்களும் செல்வதில்லை.

 

பளிச்சிடும் பற்களை கொண்டிருப்பவர்கள் மற்றவர்களிடம் தொடர்பு கொள்வதற்கும், சிரிப்பதற்கும் என்றும் தயங்குவதில்லை. இந்த பற்களின் உபயோகங்கள் பலவிதம். அவற்றைப் பாதுகாக்கும் வழிமுறைகளும் பலவிதம்.

 

உங்கள் பற்கள் பேசுவதற்கும், மெல்லுவதற்கும் மட்டுமன்றி, உங்கள் தோற்றத்தையும் மாற்றும். பல் மருத்துவத் துறை இன்று பற்களை வெண்மையாக்கும் வழிமுறைகளையும், விலை உயர்ந்த பல சிகிச்சை முறைகளால் முத்துப் போன்ற பற்களை பெற வாக்குறுதி கொடுக்கிறது. ஆனால் நாங்கள் கொடுத்துள்ள 20 டிப்ஸ்கள் மூலம் உங்கள் புன்னகை இயற்கையான வெண்மையை அடைய உதவுகிறோம்.

மவுத் வாஷ், காபி, சோடா

காபி, சோடா மற்றும் சில சமயங்களில் மவுத் வாஷ் கூட மஞ்சள் கறையை பற்களில் உண்டாக்கிவிடும். எனவே, இவற்றிலிருந்து விலகி இருக்க வேண்டும்.

ஒரு நாளுக்கு இரு முறையாவது பல் தேய்க்கவும்

ஒரு நாளுக்கு இரு முறையாவது பல் தேய்ப்பது மிக அவசியமானது. ஏனெனில் அது பற்களிலும் பற்களின் இடையிலும் படிந்திருக்கும் துணுக்குகள் மற்றம் பாக்டீரியா போன்ற நுண்கிருமிகளை வெளியேற்றும். ஆதலால் மஞ்சள் கறை படிவதிலிருந்து விடுபட பல் தேய்ப்பது அவசியம்.

பழமே பலம்!

சில நேரங்களில் நீங்கள் அவசரத்தில் பல் தேய்ப்பதை விட்டு விடுவீர்கள். அந்நேரங்களில் நீங்கள் நார்ச்சத்து மிக்க பழங்களை உண்ணலாம். அது இயற்கையான முறையில் பற்களை பாதுகாக்கிறது. சிட்ரஸ் பழங்கள் பற்களில் படிந்திருக்கும் கறைகளை இயற்கையான முறையில் வெளியேற்றுகின்றன. இப்பழங்கள் எச்சில் அதிகமாக ஊறவும் பற்களை சுத்தப்படுத்தி வெண்மையாக்குகின்றன. வைட்டமின் சி நிறைந்த பழங்களான ஸ்ட்ராபெர்ரி, கிவி ஆகியவை ஈறுகளை வலுவாக்குகின்றன. மேலும் ஆப்பிளும், பேரிக்காயும் அதிக தண்ணீர் கொண்டுள்ளதால் எச்சில் ஊறச் செய்து உதவுகிறது.

ஃப்ளாசிங்

ஃப்ளாசிங் என்றாலே நிறைய மக்கள் அது தங்கள் ஈறுகளை காயப்படுத்தி கசிவை ஏற்படுத்தும் என்று பயப்படுவதுண்டு. ஆனால் கவனத்துடனும், பொறுமையுடனும் செய்தால் அது பற்களின் நலனை பாதுகாத்து கறைப் படிவதிலிருந்து பாதுகாக்கும்.

பால் பொருட்கள்

பாலினால் தயாரிக்கப்படும் பொருட்கள் ஈறுகளில் உள்ள பிரச்சனைகளை குறைத்து, பற்களின் வெண்மையை உயர்த்தவும், பாதுகாக்கவும் செய்கிறது. பற்களிலுள்ள எனாமலை பாதுகாத்தும், வலுவூட்டுவதும் மட்டுமல்லாமல் செடார் எனும் கெட்டியான பாலாடை பற்களை வெண்மையாக்குவதிலும், தூய்மையாக்குவதிலும் சாதாரண பாலாடையை விட சிறந்த பலன் தரவல்லது.

எள்

எள் பற்களில் உள்ள துணுக்குகளை அழித்து பற்களின் எனாமலை வளர்ச்சியடையச் செய்கிறது. இவற்றில் கால்சியம் அதிகம் உள்ளதால் பற்களையும், ஈறுகளையும் சுற்றியுள்ள எலும்புகளை பாதுகாக்கிறது. சூரியகாந்தி விதைகளில் நார்ச்சத்து, புரோட்டீன், வைட்டமின் ஈ ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன. அவை மக்னீசியம் போன்ற முக்கிய தாதுக்களையும் உற்பத்தி செய்கின்றன. சூரியகாந்தி விதைகளை சாப்பிடுவதால் வாய் துர்நாற்றத்திலிருந்து விடுபடவும் மற்றும் பற்களில் கறை படிவதை தவிர்க்கவும் முடியும்.

ஸ்ட்ரா பயன்படுத்துங்கள்

ஸ்ட்ரா பயன்படுத்துவதால் பற்களில் ஏற்படும் கறைகளை தவிர்க்கலாம். குளிர்பானங்கள் பருகும் போது பற்களில் படியும் கறைகளை ஸ்ட்ரா பயன்படுத்துவதால் தவிர்க்க முடியும். ஸ்ட்ரா பயன்படுத்துவதால் பற்களின் மேல் குளிர்பானம் படாமல் நேரடியாக வாயின் உள்பகுதியில் இறங்கிவிடும்.

காய்கறிகள்

வைட்டமின் ஏ நிறைந்த காய்கறிகளான ப்ராக்கோலி, கேரட், பூசணி போன்றவை பற்களின் எனாமல் வளர உதவி செய்கிறது. இவ்வகை காய்களை பச்சையாக உண்ணுவது நல்லது. ஏனெனில் இவை ஈறுகளை இயற்கையாக மசாஜ் செய்து, பற்களின் நடுவே தூய்மையாக்கி வெண்மையை பாதுகாக்கிறது.

எலுமிச்சை மற்றும் உப்பு சேர்ந்த கலவை

சிட்ரிக் அமிலம் இருப்பதால் எலுமிச்சையுடன் உப்பு சேர்ந்த கலவையை கலந்து குடித்தால் பற்களை பளீச்சென்று மாற்ற முடியும். ஆகவே வெண்மையான பற்கள் வேண்டுமானால் இந்த கலவையால் தொடர்ந்து பல் தேய்க்கவும்டூத் பிரஷ் மாற்றம் சரியான தருணத்தில் பிரஷ்ஷை மாற்றுவது மிக முக்கியமானதாகும். அது நல்ல பலனையும் தரும். ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின் ஃப்ரஷ்ஷில் உள்ள நாறுகள் மிக கடினமடைவதால் எனாமலை காயப்படுத்தி கறை ஏற்படுத்தச் செய்யும்.

கால்சியம் கலந்த உணவு

கால்சியம் கலந்த உணவை உட்கொள்வதால் பற்களை வலுவடையச் செய்து பற்களின் அமைப்பை பாதுகாக்கின்றது

பாதுகாப்பான இடத்தில் ப்ரஷ்ஷை வைக்கவும்

ப்ரஷ்ஷை கழிப்பறையில் இருந்து குறைந்தது 6 அடி தூரத்தில் வைத்தால் தான் காற்றில் கலக்கும் கிருமிகளை தவிர்க்க இயலும். இதனால் பற்களை ஆரோக்கியமாகவும், பற்கள் பாதிப்படையாமலும் பாதுகாக்கவும் முடியும்.

பல் மருத்துவரை தொடர்ந்து அணுகுதல்

பற்கள் தொடர்பான பிரச்சனைகளுக்கு நல்ல பலன்கள் கிடைக்க உங்கள் பல் மருத்துவரை அவ்வப்போது அணுகுவது அவசியமாகும். பற்களை வருடத்திற்கு ஒரு முறையாவது சுத்தப்படுத்தாமல் இருப்பவர்கள், தொடர்ந்து பல் மருத்துவரை அணுகுபவர்களை விட, அதிகளவில் சிதைந்த பற்களையோ அல்லது மோசமான பல் தொடர்பான பிரச்சனைகளையோ சந்திக்க ஏற்படும்.

பற்களை வெண்மையாக்கும் சிகிச்சை

உங்கள் பற்களில் உள்ள கறை மோசமாக இருந்தாலோ அல்லது தீர்வு காண முடியவில்லையெனில் அதை வெண்மையாக்க சிகிச்சை மேற்கொள்ளலாம். இது உங்கள் பற்களை நன்கு வெண்மையாக்கும்.

அதிக அளவு புதினா உள்ள பேஸ்ட்

பேஸ்ட்டுகளில் புதினா அதிக அளவு இருப்பது நல்லது. ஏனெனில் புதினா பற்களை வெண்மைப் படுத்துவதில் மிக சிறந்த பலனளிக்கும் என்று ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. இது உடனடியாக இல்லாவிட்டாலும் சில காலங்களுக்குள் நல்ல பலனை தந்துள்ளது.

பரம்பரை காரணங்கள்

பெரும்பான்மையான நேரங்களில் மக்கள் பற்களில் ஏற்படும் கறைகளுக்கு பரம்பரை காரணங்களும் உள்ளன. இதனை பெரும்பாலானவர்கள் அறிவதில்லை. ஆதலால் பல் மருத்துவரை அணுகி சரியான பற்களில் கறை ஏற்படுவதற்கான சரியான காரணத்தை அறிந்து கொள்வது மிக அவசியமாகும்.

அதிக அளவு ஆன்டி-பயாடிக்ஸ் வேண்டாம்

அதிக அளவு ஆன்டி-பயாடிக்ஸ்கள் பற்களின் நிறத்தை பாதிக்கின்றன. ஆதலால் தேவையற்ற போது இத்தகைய மருந்துகளை தவிர்ப்பது நல்லது.

சோனிக் டூத் பிரஷ் உபயோகிக்கவும்

சோனிக் டூத் பிரஷ் உபயோகித்தால் பெரும்பான்மையான வேலையை அதுவாகவே செய்து விடும். சாதாரண டூத் பிரஷ்ஷால் கடினமாக அழுத்தம் கொடுத்து பிரஷ் செய்யும் போது காயம் ஏற்படுவதுண்டு. இதனால் ஈறுகளில் பாதிப்பு ஏற்பட்டு பற்கள் சிதையத் தொடங்குகின்றன. சோனிக் டூத் பிரஷ் உபயோகித்தால், இத்தகைய பிரச்சனைகளை தவிர்த்து பற்களை வெண்மையாக்க முடியும்.

பற்களை வெண்மையாக்கும் கருவிகள்

பற்களை வெண்மையாக்கும் கருவிகள் பற்களை வெண்மைபடுத்த மிக உதவியாக உள்ளது என்று ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. அதிலும் உங்கள் மருத்துவரிடம் சென்று எந்த வகை கருவிகள் சிறந்தது என்று கேட்டறிந்து பயன்படுத்துவது எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாது.

தவறான வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்துதல்

உடலின் வளர்ச்சிதை மாற்றம் சரியில்லையெனில் பற்களின் வெண்மை குறையும். ஆகவே உணவு முறையை சரி செய்தல், தொடர்ந்து உடற்பயிற்சி செய்தல், அதீத மன அழுத்தத்தை தவிர்த்தல் போன்றவற்றால் இந்த பிரச்சனையை சரி செய்யலாம்.

Web Design by Srilanka Muslims Web Team