வெற்றிகரமான உளவளத்துணை சேவை தற்கொலைகளைக் குறைக்குமா? - Sri Lanka Muslim

வெற்றிகரமான உளவளத்துணை சேவை தற்கொலைகளைக் குறைக்குமா?

Contributors
author image

M.M.A.Samad

ஒவ்வொரு வரும் சாதாரண வாழ்க்கை நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றபோது,  எதிர்பார்த்தோ எதிர்பாராமலோ பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்கின்றனர். அவ்வாறான சந்தர்ப்பங்களில் பலர் அவற்றுக்குத் தன்னம்பிக்கையோடு முகங்கொடுத்து அந்நடவடிக்ககைளை முன்னெடுத்துச் செல்கின்றனர். ஆனால் சிலரோ தன்னம்பிக்கை இழந்து அப்பிரச்சினைகளால் சோர்ந்துபோய் உள்ளத்தினதும் உடலினதும் ஆரோக்கியத்தைக் கேள்விக்குறியாக்குகின்றனர். சிலவேளை மரணத்தையும் தழுவிக் கொள்கின்றனர்.

 

வாழ்க்கையில் எத்தகைய நெருக்கடிகள் ஏற்பட்டாலும் அவற்றை தன்னம்பிக்கையோடு எதிர்நோக்குகின்றபோதுதான் அவற்றில் வெற்றிபெற முடியும். இருப்பினும், வாழும் காலங்களில்  எதிர்நோக்குகின்ற எல்லாவற்றிலும் வெற்றி கண்டவர்களும் இல்லை. அதேபோல் எல்லாவற்றிலும் தோல்வியடைந்தவர்களும் இல்லை. நமது வாழ்க்கை என்பது இன்பத்தாலும் துன்பத்தாலும், வெற்றியினாலும், தோல்வியினாலும்  கலக்கப்பட்டது என்ற வாழ்வின் தத்துவத்தையும் புரிதலையும் நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். வாழ்க்கை என்பது நமது மார்கங்கள் காட்டி வழியே  வாழ்வதற்கே. இன்பத்துக்குள் மறைந்திருக்கின்ற துன்பங்களைக் கண்டும்  வெற்றிக்குள் ஒழித்திருக்கின்ற தோல்வியினைக் கண்டும் நாம் நமது வாழ்க்கையை, பொன்னான உயிரைத் துறந்துவிடக் கூடாது.

 

ஆனால், எல்லோரையும்  மிகவும் துயரத்தில் ஆழ்த்தும் தற்கொலை எனும் துன்பியல் சம்பவங்கள் வயது வித்தியாசமின்றி மிக அதிகளவில் நம் நாட்டில் இடம்பெற்று வருகின்றமை கவலைளிப்பது மாத்திரமின்றி, சிந்திக்கவும் செய்துள்ளது. தற்கொலைகளின் பின்னணிகள் எவை? அவற்றிலிருந்து எவ்வாறு காப்பாற்ற முடியும். உளத்தாக்கத்தினால் ஏற்படுகின்ற தற்கொலை மன நிலையை உளவளத்துனை சேவையினால் ஆற்றப்படுத்த முடியுமா? அவ்வாறாயின் உளவளத்துணை சேவையும் அதற்கான நிலையங்களும் அதிகரிக்கப்படுவது அவசியமா? ஊளவளத்துணையைப் பெற்றுக்கொள்வதில் அக்கறை காட்டப்படுமா? ஏனப் பல்வேறு  கருத்துக்கள் அண்மைக்காலமாகப் பரவலாகப் பல மட்டங்களிலும் பேசப்பட்டு வருகின்றன.

 

அந்தவகையில் உளவளத்துணை சேவையினூடாக மனப்போராட்டங்களால் ஏற்படும் தற்கொலை முயற்சியையும் தற்கொலையையும் குறைக்க முடியும் என்ற கருத்துக்களும் வலுப்பெற்றுவருகிறது.

 

தற்கொலைகள்

மனப்போராட்டங்கள் உளநலத்தைப் பாதிக்கின்றபொது அது ஒருவரின் சாதாரண நடத்தையில் மாற்றங்களை, பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதன் விளைவு பல விபரீதங்களை உண்டாக்கும் அவற்றில் ஒன்றாகவே தற்கொலையும் உள்ளது.

 

இவ்வருடத்தின் ஆரம்பத்திலிருந்து வயது வித்திசாமின்றி வெவ்வேறு காரணங்களினால் நிகழும் தற்கொலைகளும் தற்கொலை முயற்சிகளுக்கான  சம்பவங்கள்; ஊடகச் செய்திகளில் முக்கியத்துமிக்கதாக மாறிவிட்டன.

 

சமூக ஊடகப் பாவனையினால் ஏற்பட்ட சிக்கல்களினால் மூன்று யுவதிகள் அல்லது பாடசாலை மாணவிகள் இவ்வருடத்தின் ஆரம்பத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனர்.    மன விரத்திக்குள்ளான இளைஞன் தன்னைத்தானனே சுட்டுத் தற்கொலை, நண்பனின் மனைவியை கொண்டவர் தூக்கிட்டுத் தற்கொலை,  இரு பிள்ளைகளின் தாய் ஓடும் ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை, தந்தையின் கெடுபிடியின் காரணமாக 17 சிறுவன் தற்கொலை, காதலனால் ஏமாற்றப்பட்ட 21 வயது காதலி நஞ்சருத்தி தற்கொலைக்கு  முயற்சி என  ஊடகங்களில் பல்வேறு தற்கொலைச் சம்பவங்களையும் தற்கொலை முயற்சிக்கான சம்பவங்களையும் கொண்ட செய்திகளை தினமும் காணக் கூடியதாக உள்ளது.

 

மூன்றாம் உலக அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் வறுமை காரணமாக ஏற்படுகின்ற மன அழுத்தம். குடும்பத் தகராறுகள், காதல்  தோல்வி. போதைப் பொருளுக்கு அடிமை, வீட்டு வன்முறைகள், தொழில்வாய்ப்பிண்மை போன்றவை இந்நாடுகளில் ஏற்படுகின்ற தற்கொலை முயற்சிகளுக்கும் தற்கொலை புரிதலுக்கும் பிரதான காரணமாகவுள்ளன.
இயற்கைக்கு மாறாக மரணத்தை ஏற்படுத்துகின்ற தற்கொலையானது இலங்கை சுதந்திரமடைந்த காலம்தொட்டு ஒரு பொதுவான நிகழ்வாக  சமூத்தில் காணப்பட்டு வருகிறது. இருப்பினும் அது அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது. இலங்கையில் ஆண்களும் பெண்களும் அடங்கலாக நாளாயிரம் பேர் ஒவ்வொரு வருடமும் தற்கொலை செய்து கொள்வதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

 

சுகாதார அமைச்சின் குடும்ப சுகாதார கல்விப் பணியகம் அண்மையில் கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த உளச் சுகாதாரம் தொடர்பான கலந்துரையாடலின்போது, ஐ.நா. அமைப்பின் குடித்தொகை செற்பாட்டுக்கான நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதி எலன் சிப்பிலனர்  இலங்கையில் தற்கொலைக்கு மிக முக்கிய காரணங்கள் மூன்றுள்ளது அதில் ஒன்று மனப்பாதிப்புகளாகும். இலங்கையில் இடம்பெறும் 40 வீதமான தற்கொலைகளுக்கு உளக்கோளாரான மனச்சோர்வு காணரமாகவுள்ளது. 15 வயதிற்கும் 35 வயதிற்குமிடைபட்டவர்களே அதிகளவில் தற்கொலை செய்துகொள்கின்றனர் என்று குறிப்பிட்டுள்ளார்.
இலங்கiயில் வருடந்தோரும் 80,000 பேர் தற்கொலைக்கு முயற்சி செய்வதுடன் 4 இலட்சம் பேர் தற்கொலைக்கான எண்ணத்துடன் காணப்படுகின்றனர்.

 

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 2.3 மில்லியன் பேர் உளப் பிரச்சினைகளை உடையவர்களாகக் காணப்படுவதாகவும்  இவர்களில் 15 வீதம் முதல் 20 வீதமானோர் தற்கொலைக்கு முயற்சி செய்வதாகவும்  பெற்றோரின் கவனிப்புக் குறைவு, காதல் தோல்வி, வாழ்வாதார மாற்றங்கள், தொழில்வாய்ப்பின்மை, தொழில் இழப்பு, தவறான குற்றச்சாட்டுகளினால் ஏற்படும் அவமானம் என்பன தற்கொலைக்கு காரணமாக  இருப்பதாகவும் அக்கலந்துரையாடலின்போது  தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இது தவிர, 172 உலக நாடுகளைக் கொண்டு உலக சுகாதார ஸ்தாபனம் மேற்கொண்ட  ஆய்வில் தற்கொலைகள் இடம் பெறும் நாடுகள் வரிசையில் இலங்கைக்கு  நான்காம் இடம் கிடைத்துள்ளது. முதலாவது இடத்தில் கயானாவும் இரண்டாம் இடத்தில்  வட கொரியாவவும் முன்றாம் இடத்தில்  தென்கொரியாவும் உள்ளன. நான்காம் இடத்தில் உள்ள இலங்கையில் ஒவ்வொரு 100,000 பேரிலும் 28.8 வீதமானோர் தற்கொலை செய்து கொள்வதாக உலக சுகாதார ஸ்தாபனம் கண்டறிந்துள்ளது.

 

அதத்துடன், பதிவாளர் நாயகத் திணைக்களத்தின் புள்ளிவிபரங்களின் படி, 1948ஆம் ஆண்டில் ஒரு இலட்சம் பேருக்கு 9 பேரும், 1970ஆண்டு ஒரு இலட்சம் பேருக்கு 19 பேரும், 1980 ஆண்டில் ஒரு இலட்சம் நபர்களுக்கு 33 பேருமாக தற்கொலை புரிந்தோரின் எண்ணிக்கை காணப்படுகிறது.

 

பல்வேறு வழிகளில் தற்கொலைகளும் தற்கொலைகளுக்கான முயற்சிகளும் இடம்பெற்றாலும் இலங்கையில் பெண்களை விட ஆண்களே அதிகளவில் தற்கொலை புரிகின்றனர். இருப்பினும் தற்கொலை புரிய வேண்டும் என்ற தன்நிலையிலிருந்து தன்னைத்தானே பலியிட்டுக்கொள்கின்றவர்கள் ஆண்களை விட பெண்களே அதிகமாகவுள்ளதாக ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.

 

இவ்வாறு தற்கொலை புரிந்தவர்களின் 2010ல் 100 பெண்களும் 44 ஆண்ளும் 2011ல் 97 பெண்களும் 39 ஆண்களும், 2012ல் 85 பெண்களும் 50 ஆண்களும் 2013ஆம் ஆண்டின் தரவுகளின்படி 76 பெண்களும் 50 ஆண்களும் இவ்வாறு தற்கொலை புரிந்துள்ளனர்.  
இவை வீட்டு வன்முறை மற்றும் பொருளாதார நெருக்கடிகள் என்பவற்றினால் கிராமப் புறங்களில் ஏற்பட்ட தற்கொலைகளாக ஆய்வில் சுட்டிக்காட்டப்படுகிறது.

 

கடந்த 2013ல் தற்கொலை செய்து கொண்டோரின் எண்ணிக்கை  3,461ஆகும். இவர்களில் 2,701 ஆண்களும்,760 பெண்களும் அடங்குவர். தற்கொலை செய்துகொண்ட ஆண்கள் தொகையில் 71 வயதிற்கு மேற்பட்டோர் 305 ஆகவும். பெண்களில் 21 வயதிற்கும் 25 வயதிற்கும் இடைப்பட்டோர் 118 ஆகவும் உள்ளன.

 

இந்நிலையில், தற்கொலைக்குப் பின்னால் பல்வேறு காரணங்கள் இருப்பினும், குறிப்பாக இளைஞர் யுவதிகளின் தற்கொலை நிகழ்வுகளுக்கு காரணமாக அமைவது அவர்களது உள சுகாதாரமற்ற நிலையாகும். சமூகத்தில் பலர் மனச்சோர்வு, விரக்தி மனப்பான்மை மற்றும் நம்பிக்கை இழப்பு போன்றவற்றுடன் வாழ்கிறார்கள்.

 

கொழும்பு பல்கலைக்கழகத்தின் சமூகவியல் பீடப் பேராசிரியர் சிறி கெட்டிகே அவர்களின் தகவலின்படி, இலங்கையில் தற்கொலைக்கு பிரதான காரணமாக இருப்பது வறுமை, இளையதலைமுறையினரிடையே மன அழுத்தம்,; வீட்டு வன்முறைகள் மற்றும் போதிய கல்வியறிவு இன்மை என அவர் குறிப்பிடுகிறாh.;  உளவளத்துணை நிலையங்கள் அதிகரிக்கப்பட்டு அதனூடாக மனச்சோர்வுக்கு உட்பட்டவர்கள் அடையாளம் காணப்படுமிடத்து மனச்சோர்வினால் தற்கொலை புரிகவர்களின எண்ணிக்கையைக் குறைக்க முடியும் என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.

 

இந்நிலையில் வெற்றிகரமான உளவளத்துணையின் அவசியமும் அதற்காக கிராம மட்டத்திலான உளவளத்துணை நிலையங்களும் அவசியம் என்பது உரிய தரப்புக்களால் புரியப்படுவது அவசியமென வலியுறுத்தப்பட்டு வருவதையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்..

 

உளவளத்துணை சேவை:

 

உளவளத்துணைக்கு பல்வேறு உளவியல் அறிஞர்கள் வௌ;வேறு வரைவிலக்கங்களை வழங்கியுள்ளனர். இருப்பினும், உளவளத்துணை என்பது ‘பிரச்சினைக்கு உட்பட்ட ஒருவரிடம் மறைந்து கிடக்கும் திறன்களை வெளிக் கொணர்வதன் மூலம் அவராகவே தனது பிரச்சினைக்கான தீர்வை எடுப்பதற்கு உதவுகின்றதொரு செயற்பாடு’ எனப் பொதுவான வரைவிலக்கனம் கொடுக்கப்படுகிறது .
 அந்த வகையில், அமெரிக்க உள நலச் சங்கம் இவ்வுளவளத்துணை சேவையை ‘ஒருவர் தனது உளவளங்களின் முழுமையான விருத்தியை நோக்கிச் செல்கின்ற பயணத்தில் அவர் சந்திக்கின்ற தடைகளை வெற்றி கொள்ள அவருக்கு அளிக்கும் ஒரு தொடர் செயற்பாட்டு உதவியே’ என குறிப்பிடுகிறது.

 

இன்றைய சமூக அமைப்பில் உளவளத்துணை சேவை முக்கியமானதொரு சேவைத்துறையாகக் காணப்படுகிறது. இயற்கை அனர்த்தங்கள், போர்ச் சூழ்நிலைப் பாதிப்புக்கள் மற்றும் மக்கள் மத்தியில் நிலவும் உள சமூகப் பிரச்சினைகளும் அவற்றினால்  ஏற்படுகின்ற உளத்தாங்களும் இதன் முக்கியத்துவத்தினை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது.

 

மனித வாழ்க்கையானது முரண்பாடுகள், பிரச்சினைகள் ஆகியவற்றோடு பின்னிப்பிணைந்ததாகக் காணப்படுகின்றது. தனி நபருக்கும் குடும்பத்திற்கும் சமூகத்திற்குமிடையிலான முரண்பாடுகள், கருத்து வேற்றுமைகள் உடல், உள, குடும்ப நலன்களை பெரிதும் பாதிக்கின்றன. அவற்றுக்கு எதிர் நீச்சல் போடமுடியாது பலரை தற்கொலை வரை இட்டுச் செல்கிறது.  

 
இந்நிலையில் இவ்வாறான பிரச்சினைகளினால் உள ரீதியாகக் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களின் உள்ளத்தை ஆற்றுப்படுத்துகின்ற ஒரு வழி முறையே இந்த உளவளத்துணையாகும். குறிப்பாக உணர்ச்சிக் சிக்கல்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவும் சிகிச்சையும் அளித்தல்  இதன் நோக்கமாகக் காணப்படுகிறது.
 
பொதுவாக உணவளத்துணை என்னும்போது பிரச்சினைக்கு உட்பட்ட ஒரு நபருக்கு அவரிடமே மறைந்திருக்கும் வளமான திறன்கள், பலம், ஆற்றல் என்பவற்றை வெளிக்கொணர்வதன் மூலம் அவருக்கு அந்தப் பிரச்சினையை தீர்த்துக்கொள்வதற்கு வழியமைத்துக் கொடுக்கும் ஒரு முறையாக இருக்கின்றது என்று கூறலாம.; உளவளத்துணை மூலம்தனியாகத் தீர்க்க முடியாத பிரச்சினை ஒன்றிற்கு தீர்வொன்றைத் தேடிக்கொள்ளவும், தனியாள் ஆளுமையைக் கட்டி எழுப்பவும் பிரச்சினைக்குட்படுகின்ற சந்தர்ப்பங்களில் சரியான தீர்மானத்திற்கு வருவதற்கும், மற்றொருவரிடம் சொல்ல முடியாத விடங்களை நம்பிக்கையான ஒருவரிடம் கூறுவதன் மூலம் உள்ளத்தினை சாந்திப்படுத்தவும், சரியான தீர்மானத்திற்கும் தீர்வுக்கு வரவும் இந்த உளவளத்துணை உதவியளிக்கிறது.

 

இவ்வாறானதொரு சேவையின் முக்கியத்துவமும் அதன் வெற்றிகரமான செயற்பாடுகளும் ஒழுங்குபடுத்தப்படாத ரீதியில்  மேற்கொள்ளப்படாத நிலையே இலங்கையில் உளப்பிரச்சினைகளினால் ஏற்படும் தற்கொலை போன்ற சமூகப் பிரச்சினைகள் அதிகரித்துக் காணப்படுவதற்கு காரணமாக இருப்பதாக சமூக ஆர்வளர்களும் உளவியலாளர்களும் சுட்டிக்காட்டுகின்றனர்.

 

உளவளத்துணை செயற்பாடுகள் பாடசாலை மட்டத்திலும் கிரமா உத்தியோகத்தர் பிரிவு மட்டத்திலும வெற்றிகரமாக மேற்கொள்ளப்படுகின்றபோது தற்போது இலங்கையின் சனத்தொகையில் நான்கு பேருக்கு ஒருத்தர் ஏதுமொரு உளப்பிரச்சினைக்கு ஆளாகியுள் நிலையில் மாற்றத்தை ஏற்படுத்துவதுடன், மனச்சோர்வு, விரத்தி மனப்பாங்கு போன்ற உளப்பிரச்சினையால் ஏற்படுகின்ற தற்கொலை போன்ற சமூகப் பிரச்சினைகளைப் குறைக்க முடியும்.

 

‘உளவியல் முறைகளினூடாக நபர்களின் ஆளுமை விருத்தி, சமநிலையற்ற உளநிலைமைகளைத் தவிர்த்தல், நிறுவன ஒருங்கிணைப்பு, தலைமைத்துவம் வழங்குதல், அறிவூட்டல் மற்றும் உளவளத்துணை தேவைகளை நிறைவு செய்வதன் மூலம் உளச் சுகாதாரத்தை மேம்படுத்தி சகல பிரஜைகளையும் இலங்கையின் தேசிய அபிவிருத்தியில் பங்குபற்றச் செய்தல்’ என்ற சமூக சேவைகள் அமைச்சின் பணிகள் வெற்றிகரமாக செயற்படுத்தப்படுதல் அவசியம்.

 

இப்பணிகளை பாடசாலை மட்டத்திலும் கிரமா சேவகர் மட்டத்திலும் முன்னெடுப்பதற்கு பாடசாலைகள் தோரும், கிராம சேவகர் பிரிவுதோரும் உளவளத்துணை நிலையங்கள் உருவாக்கப்பட்டு அவற்றிற்கு தொழில்வாண்மை உளவளத்துணையாளர்கள் நியமிக்கப்பட்டு இந்த உளவளத்துணை சேவையானது வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுமாயின் உள ஆரோக்கிமுள்ள எதிர்கால சமூகத்தை கட்டியெழுப்புவதுடன் உளக்கோளாறுகளினால் ஏற்படும்  தறகொலைகளைக் குறைத்து இம்மனித வளங்களை இந்நாட்டின் அபிவிருத்தியில் ஈடுபடச் செய்ய முடியுமென்பதே நாட்டின் மீது பற்றும் இளைய தலைமுறையினர் மீது  அன்பும் கொண்டோரின் அவாவாகும்.

Web Design by Srilanka Muslims Web Team