வெற்றிக்கிண்ணத்தை கைப்பற்றியது ஓட்டமாவடி வளர்பிறை (video) » Sri Lanka Muslim

வெற்றிக்கிண்ணத்தை கைப்பற்றியது ஓட்டமாவடி வளர்பிறை (video)

vv99

Contributors
author image

ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்

வீடியோ இறுதி நிகழ்வு : –

வாழைச்சேனை அல்-அக்ஸா விளையாட்டு கழகம் வருடா வருடம் நடாத்தும் 20 ஓவர்களை கொண்ட கிரிக்கட் சுற்றுப்போட்டியின் இவ்வருட தொடருக்கான இறுதி போட்டியானது  (07.05.2017) ஓட்டமாவடி அமீர் அலி விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்றது.

இறுதி போட்டியில் ஓட்டமாவடியின் சிரேஷ்ட கழகங்களில் ஒன்றான வளர் பிறை விளையாட்டு கழகமும் பிரதேசத்தில் பண்பாடான வளர்ந்து வரும் விளையாட்டு கழகம் என பெயரெடுத்து வரும் ஓட்டமாவடி யங்- சோல்ஜர்ஸ் விளையாட்டு கழகமும் பலப்பரீட்ச்சை நடாத்தியதில் ஓட்டமாவடி வளர்பிறை விளையாட்டு கழகம் மிக இலகுவாக வெற்றியீட்டி மர்ஹும் சஜ்ஜாத் வெற்றிக்கிண்ணத்தை கைப்பற்றி கல்குடாவின் முதன்மையான கழகம் என்பதனை மீண்டும் பறைசாற்றியது.

குறித்த கிரிக்கட் சுற்றுபோட்டிக்கு சமூக ஆர்வலரும் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் முன்னாள் இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளருமான சாட்டோ வை.எல்.மன்சூர் பூரண அனுசரணை வழங்கியதோடு, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாரூக், சாட்டோ வை.எல்.மன்சூர், முன்னாள் தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட், பிரபல வர்த்தகர் நியாஸ் ஹாஜி, பொலீஸ் உப இன்ஸ்பெக்டர் ஜனாப் அஹமட், ஜனாப் நசீர் ஜானு அதீதிகளாக கலந்து சிறப்பித்தனர்.

Web Design by The Design Lanka