வெளிநாடுகளில் இருந்து பரிசு கிடைத்துள்ளதாக கூறி மக்களிடம் பல லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கும் கும்பல்..! - Sri Lanka Muslim

வெளிநாடுகளில் இருந்து பரிசு கிடைத்துள்ளதாக கூறி மக்களிடம் பல லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கும் கும்பல்..!

Contributors
author image

Editorial Team

வெளிநாடுகளில் இருந்து பரிசு கிடைத்துள்ளதாக கூறி மக்களிடம் பல லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கும் கும்பல் ஒன்று நாடு முழுவதும் செயற்படுகின்றது.

வெளிநாட்டில் உள்ள நண்பர் போன்று பேஸ்புக், வட்ஸ்அப் ஆகிய சமூக வலைத்தளங்கள் ஊடாக தொலைபேசி அழைப்பு மற்றும் குறுந்தகவல் அனுப்பி இந்த குழு செயற்படுகின்றது.

இந்த மோசடி நடவடிக்கைக்குள் அவிசாவளை பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவர் சிக்கியுள்ளார்.

இலங்கைக்கு அனுப்புவதாக கூறும் பார்சலில் பெறுமதியான கையடக்க தொலைபேசி, வெளிநாட்டு பணம், தங்க நகைகள் மற்றும் அதிக பெறுமதியிலான ஆடைகள் மற்றும் பாதணிகள் அதில் உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்த பொருட்களை வைத்து வீடியோ ஒன்றை அனுப்பிய பின்னர் அதற்காக 95000 ரூபாய் முத்திரை கட்டணம் செலுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். அதற்காக ஆதார புகைப்படம் ஒன்றையும் இந்த குழுவினர் அனுப்பி வைக்கின்றனர்.

இவ்வாறான மோசடியில் சிக்கி பல லட்சம் ரூபாய் பணத்தை இழந்த பலரிடம் இருந்து முறைப்பாடு கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இந்த மோசடியில் சிக்கிக்கொள்ள வேண்டாம் என பொது மக்களுக்குள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team