வெளிநாடுகளுக்கு செல்வோருக்கு இலவச தொலைபேசி வசதி: கத்தார் அரசு அறிமுகம்! - Sri Lanka Muslim

வெளிநாடுகளுக்கு செல்வோருக்கு இலவச தொலைபேசி வசதி: கத்தார் அரசு அறிமுகம்!

Contributors

கத்தாரிலிருந்து வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும் அந்நாட்டு குடிமக்களுக்காக அரசு இலவச தொலைபேசி வசதியை ஏற்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த வசதி முதல்கட்டமாக 82 நாடுகளில் செயல்படுத்தப்படும் என்றும், பின்னர் மேலும் 16 நாடுகளுக்கு விரிவுபடுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கத்தார் டெல்கோ ஊரிடு நிறுவனம் இந்த நாடுகளுடனான ஒப்பந்தத்தை உறுதி செய்துவிட்டது என்று பத்திரிகை தகவல் வெளிவந்துள்ளது. ஆனால், இணைப்பு அளிக்கப்படும் நாடுகளின் பெயர்கள் அதில் வெளியிடப்படவில்லை.
தகவல் தொடர்பு சேவையுடன் கூடுதலாக அளிக்கப்படும் இந்த இலவச தொலைபேசி வசதியானது வெளிநாடுகளுக்கு செல்லும் மக்களைப் பற்றிய அரசு அக்கறையையும் மற்றும் மக்களுக்கு சேவை செய்யும் அரசு மனப்பான்மையையும் வெளிப்படுத்துவதாக உள்ளது என்று தகவல் தொலைத்தொடர்புத் துறையின் இயக்குனர் சைப் அல் குவாரி தெரிவித்தார்.
இந்த ஏற்பாட்டின்படி வெளிநாட்டுப் பயணிகளிடமிருந்து பெறப்படும் தகவல்கள் உடனுக்குடன் அங்கு எந்நேரமும் பணியில் இருக்கும் அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்படும். மேலும் இந்த அலுவலகம் கத்தாரின் வெளிநாட்டுத் தூதரகங்களுடனும், அதிகாரிகளுடனும் எப்போதும் தொடர்பில் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. பயணிகளுக்கு அளிக்கப்படும் இந்த இலவச சேவைக்கு ஆகும் செலவை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி கத்தார் மக்கள் எந்த நாட்டிற்கு சென்றாலும் அங்கு சென்று சேர்ந்தவுடன் கத்தார் அரசு சார்பில் அவர்களுக்கு ஒரு வரவேற்பு தகவலும் அனுப்பப்படும் என்று தொலைத்தொடர்புத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
இலவச சேவை நடைமுறைக்குக் கொண்டு வரப்படும் அனைத்து நாடுகளுக்கும் ஒரே எண்ணைப் பெற கத்தார் அரசு முயற்சித்தது. ஆனால் இது நடைமுறைக்கு சரிவராததால் 42 நாடுகளுக்கு 8000 8000 100 என்ற எண் பெறப்பட்டுள்ளது. மற்ற நாடுகளில் இந்தத் தொலைபேசியின் எண் மாறிவரும் என்று இயக்குனர் குவாரி கூறியுள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team