வெள்ளிக்கிழமைக்குள் துறைமுகத்திலுள்ள அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை விடுவிக்கலாம் - டலஸ் அழகப்பெரும..! - Sri Lanka Muslim

வெள்ளிக்கிழமைக்குள் துறைமுகத்திலுள்ள அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை விடுவிக்கலாம் – டலஸ் அழகப்பெரும..!

Contributors

வெள்ளிக்கிழமைக்குள் துறைமுகத்தில் தேங்கியுள்ள பால்மா உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை விடுவித்துக் கொள்ள எதிர்பார்த் துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

தேவையான 50 மில்லியன் டொலர் வழங்கப்பட்டுள்ளது. எனவே பால்மா உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய அனைத்துக் கொள்கலன் களையும் இரு தினங்களுக்குள் விடுவித்துக் கொள்ள முடியும் என்று டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று புதன்கிழமை நடை பெற்ற போது இதனை அவர் தெரிவித்தார்.

Web Design by Srilanka Muslims Web Team