வெள்ளைப்பூண்டு மோசடியை அம்பலப்படுத்திய அதிகாரியின் வீட்டிற்கு அருகில் வெள்ளை வேன்..! - Sri Lanka Muslim

வெள்ளைப்பூண்டு மோசடியை அம்பலப்படுத்திய அதிகாரியின் வீட்டிற்கு அருகில் வெள்ளை வேன்..!

Contributors

நுகர்வோர் அதிகார சபையின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் துசான் குணவர்த்தன கிருலப்பனையில் உள்ள தனது வீட்டிற்கு அருகில் வெள்ளை வேனில் இனந்தெரியாத குழுவினர் நடமாடுகின்றனர் எனத் தெரிவித்துள்ளார்.

துசான் குணவர்த்தன இது குறித்து கிருலப்பனை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

கடந்த வியாழக்கிழமை சந்தேகத்திற்கு இடமான நபர்கள் வெள்ளை வேனில் தனது வீட்டிற்கு அருகில் காணப்படுகின்றனர் என அவர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

வேனிலிருந்து இறங்கிய நபர் ஒருவர் எனது வீட்டின் கேட்டில் உள்ள இலக்கத்தை உறுதிப்படுத்தியதை தான் பார்த்ததாக அயலவர் ஒருவர் தெரிவித்துள்ளார் என அவர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக ஒரு மாதத்திற்கு முன்னரே பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team