வெள்ளையனும் நம்மவனும் » Sri Lanka Muslim

வெள்ளையனும் நம்மவனும்

phone

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

Mohamed Nizous


சாதனை செய்வான் வெள்ளையன் -அதை
யூத சதி என்பான் நம்மவன்

பேஷ் புக் தந்தான் வெள்ளையன் – அதில்
பேக் ஐடி புகுத்தினான் நம்மவன்

ரிமோட்டை தந்தான் வெள்ளையன் – அதற்கு
ரெப்பர் பேண்ட் போட்டான் நம்மவன்

தொலைக் காட்சி தந்தான் வெள்ளையன் – அதன் மேல்
துணியால் போர்த்தினான் நம்மவன்

சோபாவை இருப்பான் வெள்ளையன் – அதில்
சுருட்டிட்டு படுப்பான் நம்மவன்

கமராவைத் தந்தான் வெள்ளையன் – அதில்
குமரை பிடிப்பான் நம்மவன்

பஸ்ஸைத் தந்தான் வெள்ளையன் – அதில்
பர்ஸை அடிப்பான் நம்மவன்

Touch போண் தந்தான் வெள்ளையன் -அதைக் காட்டி
Rich நான் என்பான் நம்மவன்.

இன்னும் இருக்கு சொல்வதற்கு
இன்ஷா அல்லாஹ் தொடரும்

Web Design by The Design Lanka