வேகந்த பள்ளிவாசலில் சுற்றுலா பயணிகள்! - Sri Lanka Muslim
Contributors

கொழும்பு – 02, கொம்பனித் தெருவிலுள்ள வேகந்த பள்ளிவாசலை சுற்றுலா பயணிகள் பார்வையிட அனுமதிக்கப்படும் என பள்ளிவாசல் நிர்வாகம் இன்று அறிவித்தது.

 

சுற்றுலா பயணிகளின் கலாசார சுற்றுலாவின் ஒரு பகுதியாக வேகந்த பள்ளிவசாலுக்கு விஜயம் மேற்கொள்ள முடியும் என பள்ளிவாசல் தலைவர் எம்.பசீர்  தெரிவித்தார்.

 
இந்த நடவடிக்கை எதிர்வரும் 31ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு ஆரம்பிக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.

 

அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் காலை மற்றும் மாலை நேரங்களில் சுற்றுல்லா பயணிகள் பள்ளிவாசலுக்கு விஜயம் மேற்கொள்ள முடியும் என அவர் தெரிவித்தார்.

 
ஒல்லாந்தர் நாட்டை ஆட்சி செய்த காலப் பகுதியில் 1786ஆம் ஆண்டு வேகந்த பள்ளிவாசல் நிர்மாணிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. (நன்றி விடியல்)

Web Design by Srilanka Muslims Web Team