வேட்பாளர் விருப்பு வாக்கு இலக்கம் எதிர்வரும் 11 ஆம் திகதி அறிவிப்பு! - Sri Lanka Muslim

வேட்பாளர் விருப்பு வாக்கு இலக்கம் எதிர்வரும் 11 ஆம் திகதி அறிவிப்பு!

Contributors

-DC-

 

மேல் மற்றும் தென் மாகாண சபைத் தேர்தல்களில் போட்டியிடும் அபேட்சகர்களுக்கான விருப்பு வாக்களிப்பு இலக்கம் எதிர்வரும் செவ்வாய்க் கிழமையில் வெளியிட முடியும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

 

 

மேற்படி இரு மாகாண சபைகளுக்குமான வாக்களிப்பு எதிர்வரும் 29 ஆம் திகதி காலை 7.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெறவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

 

மேல் மாகாண கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீனக் குழுக்கள் உட்பட 33 கட்சிகளும், கம்பஹா மாவட்டத்தில் 22 கட்சிகளும், களுத்தறை மாவட்டத்தில் 24 கட்சிகளும் வேட்பு மனுக்களை தாக்கள் செய்துள்ளன.

 

 

தென் மாகாண ஹம்பாந்தொட்டை மாவட்டத்தில் அரசியல் கட்சி மற்றும் சுயாதீனக் குழு உட்பட 13 கட்சிகளும், காலி மாவட்டத்தில் 18 கட்சிகளும், மாத்தறை மாவட்டத்தில் 19 கட்சிகளும் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்துள்ளதாகவும் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team