“வைத்தியர் விவகாரம் ஊடகங்களில் வந்த செய்தி இப்போது முற்றுப்பெற்றுள்ளது” - Sri Lanka Muslim

“வைத்தியர் விவகாரம் ஊடகங்களில் வந்த செய்தி இப்போது முற்றுப்பெற்றுள்ளது”

Contributors

முன்னாள் அமைச்சரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவருமான ரிஷாத் பதியுதீன் கடந்த 125 நாட்களுக்கு மேலாக திட்டமிட்டு சிறைபிடிக்கப்பட்டிருப்பதை போலியான குற்றச்சாட்டுக்கள் ஊடாக சோடிக்கப்பட்டுள்ளதை நாம் அனைவரும் அறிவோம்.

நாளுக்கு நாள் ஏதோ ஒரு செய்தியை சிங்கள ஊடகங்கள் திட்டமிட்டு வெளிப்படுத்துவார்கள் ஆனால் அந்த செய்திகள் தொடர்பான உண்மைகள் தொடர்பாக வெளியிடாமல் குற்றச்சாட்டுக்களை உண்மையான குற்றம் போல் சுட்டிக்காட்டி மக்கள் மீது ரிஷாத் பதியுதீனை வெறுப்படையைச் செய்யும் செயத்திட்டங்களை இந்த அரசும், ஊடக விபச்சாரிகளும் மேற்கொண்டு வருகின்றனர் என புலனாகின்றது. அதற்கு உந்து சக்தியாக ஊடகங்களுக்கு முன் ஏதோ ஒரு பாதுகாப்பு அதிகாரி செய்தியை உறுதிப்படுத்தி பெரிதாக சித்தரிப்பது வழக்கமாக்கியுள்ளார்கள். அவ்வாறு போலி தகவல்களை இஷாலி விவகாரத்தில் வெளியிட்ட பொலிஸ் ஊடகப்பேச்சாளருக்கு நீதிமன்ற தடை விதித்ததும் குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில், இந்த வாரம் புதிய குற்றச்சாட்டு ஒன்று கெளரவ. ரிஷாத் பதியுதீனின் மீது திட்டமிடப்பட்டு வெளிப்படுத்தப்பட்டது.

அதாவது “முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் – சிறைச்சாலையின் வைத்தியரை மிரட்டியதாகவும், அவர் மீது கொலை மிரட்டலை மேற்கொண்டதாகவும் சுட்டிக்காட்டி பெரும் பரபரப்பை சிங்கள ஊடகங்கள் சுட்டிக்காட்டியது.”

கடந்த 5 நாட்களாக திட்டமிட்டு அவர் மீது இந்த குற்றச்சாட்டு வெளிப்படுத்தியதையும், அது தொடர்பாக ஒரு சிறைச்சாலை பாதுகாப்பு அதிகாரி பெரிய செய்தி போல் வெளிப்படுத்தி நாளுக்கு நாள் அறிக்கை விட்டும் இருந்தார்.

இது தொடர்பில் நாம் ஆராய்ந்த போது எமக்கு கிடைத்த தகவலின் படி;

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனை 112 நாட்களாக தடுத்து வைத்து விசாரித்த குற்றப்புலான்ய்வு பிரிவினர் நீதிமன்றில் ஆஜர் செய்த போது- நீதிமன்ற நீதிபதியுயினால் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார் . அதன் போது ரிஷாத் பதியுதீனின் தரப்பு அவர் சுகயீனமடைந்துள்ளாத சுட்டிக்காட்டிய போது, நீதிமன்றம் அவரை சிறைச்சாலை வைத்தியரிடம் காட்டி சரியான சிகிச்சைகளை பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சிறைச்சாலை திணைக்களத்திற்கு உத்தரவிட்டிருந்தது.

அவ்வாறு இருக்க கடந்த 15 ஆம் திகதி சிறைச்சாலை வைத்தியர், ரிஷாத் பதியுதீனை பரிசோதித்து சரியான மருத்துவ ஆலோசனை வழங்குவதற்கு மறுத்துள்ளார். அதனை புரிந்துகொண்ட ரிஷாத் பதியுதீன் வைத்தியரிடம் சுட்டிக்காட்டிய போதும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளாததால்- “தன் மீது நீங்கள் மேற்கொள்ளும் செயற்பாட்டை நான் கண்டிக்கின்றேன், இது தொடர்பில் நான் பாராளுமன்றில் பேசுவேன்” என்ற வார்த்தையை மாத்திரமே வைத்தியரிடம் சுட்டிக்காட்டி பேசிய்யுள்ளார். இதற்கு சாட்சியாக அங்குள்ள கைதிகளும் இருந்துளனர் .

இந்த சம்பவத்தை திட்டமிட்டு சில தரப்புகளால் பெரிதுபடுத்தி ரிஷாத் பதியுதீன் வைத்தியருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார் என செய்திகளை பிரசுரித்தமையானது- ரிஷாத் பதியுதீன் மீதான மற்றுமொரு பழிவாங்கல் நடவடிக்கையாகவே பார்க்கப்படுகின்றது.

இந்த சம்பவங்கள் நீதிமன்றில் கடந்த சில நாட்களுக்குமுன் முன்வைப்பட்டது.

நடக்காது ஒரு சம்பவத்தை நடந்த்தாக வெளிப்படுத்தும் இந்த நடவடிக்கைகளுக்கு பின்னால் ஏதோ இரு சக்தி இருப்பதாகவே அறியமுடிகின்றது. ரிஷாத் பதியுதீன் குண இயல்புகள் பற்றி முஸ்லிம் சமூகமும்- வன்னி மூவின மக்களும்- அரசியல்வாதிகளும் நன்கு அறிந்துவைத்துள்ளனர்.

ரிஷாத் பதியுதீன் கொலை மிரட்டல்கள் விடுக்குமளவு இல்லை என்பது இந்த ஆட்சியாளர்கள் முதல் மக்கள் வரை அறிந்துவைத்துள்ளனர்: இவ்வாறு இருக்க இப்படியான பொய்யான செய்திகளை வெளிப்படுத்தி ரிஷாத் பதியுதீனை பெரிய குற்றவாளியாக காட்ட முயற்சிப்பது மிக தெளிவான விடயமாகும். ஆனால் இவைகள் அனைத்தும் இப்போது போலியாகவே முடிவுக்கு வந்துள்ளது- அல்ஹ்மதுலில்லாஹ்

இவைகள் முலம் சூழ்ச்சிக்காரர்களே அழிவார்கள் என்பதே நிஜம் !

Web Design by Srilanka Muslims Web Team