ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி மாகாண சபை தேர்தலில் தனித்து போட்டியிடாது - தயாசிறி - Sri Lanka Muslim

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி மாகாண சபை தேர்தலில் தனித்து போட்டியிடாது – தயாசிறி

Contributors

மாகாண சபைத் தேர்தலில் தனித்து போட்டியிட தீர்மானம் எடுக்கவில்லை என ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

ஆனாலும் அரசாங்கத்திற்குள் இன்னும் தான் புறக்கணிக்கப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.

தாங்கள் உருவாக்கிய அரசாங்கம் என்பதால் பிரச்சினைகளை சரிசெய்து கொண்டு முன்னோக்கி செல்லவுள்ளதாக அவர் கூறினார்.

மாகாண சபைத் தேர்தலின் போது தமது கட்சியை பாதுகாத்து முன்னோக்கி செல்ல எதிர்பார்ப்பதாகவும் அதற்கு குந்தகம் ஏற்படுத்தும் தீர்மானங்களை எடுக்கப் போவதில்லை எனவும் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழு கூட்டத்தின் பின் ஊடகங்களுக்கு கருத்து வௌியிடுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Web Design by Srilanka Muslims Web Team