ஷார்ஜாவில் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக முன்னாள் மாணவர் சங்க விழா! - Sri Lanka Muslim

ஷார்ஜாவில் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக முன்னாள் மாணவர் சங்க விழா!

Contributors

ஷார்ஜா: ஷார்ஜாவில் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக முன்னாள் மாணவர் சங்கத்தின் சார்பில் பல்கலைக்கழகத்தின் நிறுவனர் சர். சையத் கானின் 196 ஆவது நிறுவனர் தின விழா 01.11.2013 அன்று மாலை ஷார்ஜா ஹாலிடே இன்டர்னேஷனல் ஹோட்டலில் வெகு சிறப்புற நடைபெற்றது.

இறைவசனங்களுடன் விழா இனிதே துவங்கியது. அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக துணை வேந்தர் லெப்.ஜெனரல் ஜமீருத்தீன் ஷா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். கல்லூரியின் வளர்ச்சிக்கு வெளிநாடு வாழ் முன்னாள் மாணவர்கள் உதவிட கேட்டுக் கொண்டார். உணர்ச்சிகரமான அவரது உரை முன்னாள் மாணவர்கள் மத்தியில் ஒரு உத்வேகத்தை ஏற்படுத்தியது.

முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர் தனது உரையில், இஸ்லாமியர்கள் இன்றி இந்தியா இல்லை என வரலாற்றுப்பூர்வ ஆய்வுரையினை வழங்கினார்.

நிகழ்ச்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் பங்கேற்றுச் சிறப்பித்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அனீஷ் அஹமத் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

Web Design by Srilanka Muslims Web Team