ஷிப்லியின் முயற்சியினால் புதிய ஆரம்பப் பாடசாலை ஆரம்பம் » Sri Lanka Muslim

ஷிப்லியின் முயற்சியினால் புதிய ஆரம்பப் பாடசாலை ஆரம்பம்

si66

Contributors
author image

M.T. ஹைதர் அலி - செய்தியாளர்

கிழக்கு மாகாண சபை உறுப்பினர்  ஷிப்லி பாறூக்கின் முயற்சியினால் கிழக்கு மாகாண கல்வி அமைச்சினூடாக புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள காத்தான்குடி தாருஸ்ஸலாம் ஆரம்ப பாடசாலையின் முதலாம் தரத்திற்கான புதிய மாணவர் வரவேற்பு நிகழ்வு 2017.01.11ஆந்திகதி – புதன்கிழமை தாருஸ்ஸலாம் பாடசாலையில் நடைபெற்றது.

பாடசாலையின் அதிபர் முனீர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஷிப்லி பாறூக் கலந்து கொண்டதோடு பாடசாலை ஆசிரியர், அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், மற்றும் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

காத்தான்குடி பிரதேசத்திலுள்ள பாடசாலைகளில் நிலவும் அதிக மாணவர்கள் சுமை காரணமாக புதிய மாணவர்களை சேர்ப்பதிலுள்ள சிரமம் மற்றும் மாணவர்கள் தூர இடங்களுக்கு சென்று கல்வி கற்பதால் ஏற்படும் அசௌகரியங்கள் என்பவற்றை தவிர்க்கும் நோக்கில் மக்களின் வேண்டுகோளிற்கமைவாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக்கின் முழு முயற்சியினால் இப்பாடசாலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இப்பாடசாலையானது காத்தான்குடி தீன் வீதியிலுள்ள பகுதி ஒன்றில் இவ்வருடம் தொடக்கம் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு இப்பாடசாலைக்கான நிரந்தர கட்டடங்கள் அமைக்கப்படும் வரை தற்போது இப்பாடசாலையானது அப்பிரதேசத்திலுள்ள தற்காலிக கட்டடம் ஒன்றில் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

si-jpg2

Web Design by The Design Lanka