ஷியா கொள்கையை பரப்பும் இரான், கத்தாருக்கு 5 விமானங்களில் உணவு அனுப்பியது » Sri Lanka Muslim

ஷியா கொள்கையை பரப்பும் இரான், கத்தாருக்கு 5 விமானங்களில் உணவு அனுப்பியது

fligh

Contributors

பிராந்திய அளவில் விதிக்கப்பட்ட தடைகளால் பாதிக்கப்பட்ட கத்தாருக்கு, 5 விமானங்களில் இரான் உணவுப் பொருட்களை அனுப்பியுள்ளது.

இரான்படத்தின் காப்புரிமைIRANAIR

இரானின் முக்கிய போட்டியாளராக விளங்கும் சௌதி அரேபியா உள்பட பல நாடுகள், கத்தார் தீவிரவாத செயல்களுக்கு நிதி ஆதரவு அளிப்பதாக குற்றஞ்சாட்டி கத்தாருடனான உறவுகளை கடந்த வாரம் துண்டித்து கொண்டன. இதனை கத்தார் மறுத்துள்ளது.

சௌதி அரேபியாவின் எல்லை நிலப்பரப்பில் இருந்து கத்தாருக்கு 40 சதவீதம் உணவுப் பொருட்கள் வருகின்ற பாதை மூடப்பட்டுள்ளது.

கத்தாருடன் தொடர்புகளை துண்டித்துள்ள சில நாடுகளில், அங்கு வாழுகின்ற கத்தார் மக்கள் வெளியேற வேண்மென ஆணையிட்டுள்ளன. ஆனால், இதே மாதிரி கத்தார் ஆணையிட போவதில்லை என்று அறிவித்துள்ளது.

“பழங்கள், காய்கறிகள் போன்ற விரைவில் அழுகிவிடும் உணவுப் பொருட்களை கொண்டு இதுவரை 5 விமானங்கள் கத்தாருக்கு அனுப்பப்பட்டுள்ளன. அவை ஒவ்வொன்றும் 90 டன் உணவுப் பொருட்களை கொண்டு சென்றன. இன்னொரு விமானம் இன்று அனுப்பப்படயிருக்கிறது” என்று இரான் ஏர் விமான நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் ஷாரோக் நௌஷாபாடி எஃஎப்பி செய்தி நிறுவனத்திடம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார்.

கத்தார்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

இந்த உணவுப் பொருட்கள் உதவியாக வழங்கப்படுகிறதா அல்லது வணிகப் பரிமாற்றமா என்று தெளிவாக தெரியவில்லை.

ஷிராஸ் விமான நிலையத்திலுள்ள விமானம் ஒன்றில் பொருட்கள் ஏற்றப்படுவதாக இரான் ஏர் டிவிட்டர் பதிவிட்டுள்ளது.

அங்கு தேவையிருப்பது வரை உணவுப் பொருட்கள் அனுப்பப்டும் என்று நௌஷாபாடி தெரிவித்திருக்கிறார்.

350 டன் உணவுப் பொருட்களை கத்தாருக்கு அனுப்ப 3 கப்பல்கள் தயாராக இருப்பதாக தாஸ்நிம் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளதை எஃஎப்பி மேற்கோள் காட்டியுள்ளது.

சௌதி அரேபியா, பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்டுக்கள் தங்களுடைய வான்வழிகளை கத்தாருக்கு மூடியுள்ள நிலையில், இரான் தன்னுடைய வான்பரப்பை கத்தாருக்கு திறந்துள்ளது.

தொழிலாளிபடத்தின் காப்புரிமைAFP

சுன்னி முஸ்லிம்களால் ஆளப்படும் சௌதி அரேபியாவின் முக்கிய போட்டியாளரான ஷியா கொள்கைவாதிகளின் தலைமையிலான இரானோடு கத்தார் கொண்டுள்ள நேர்மறை உறவுகள், இந்த பிராந்தியத்தில் இரானின் செல்வாக்கை கொண்டுவரும் என்பது சமீபத்திய இந்த சர்ச்சை ஏற்படுவதற்கான காரணங்களில் ஒன்றாகும். எனவே, சமீபத்திய இந்த உணவுப் போக்குவரத்து பதட்டத்தை தணிக்காது என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், சௌதி அரேபியா, பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்டுகள் 14 நாட்களில் தங்கள் பகுதியில் வாழும் கத்தார் மக்கள் வெளியேற வேண்டும் என்று ஆணையிட்டுள்ள பிறகு, இதற்கு பதில் நடவடிக்கை எடுக்கப்போவதில்லை என்று கத்தார் தெரிவித்துள்ளது.

இந்த மூன்று நாடுகளில் இருந்து 11 ஆயிரம் மக்கள் கத்தாரில் இருப்பதாக நம்பப்படுகிறது,

ஞாயிற்றுக்கிழமை நடந்தவைகள்

சௌதி அரேபியா, பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்டுகள் தங்களின் பகுதிகளில் இருக்கும் கத்தாரி மக்களின் உதவிக்காக ஹாட்லைன் தொலைபேசி வசதியை அளித்துள்ளது. பதட்டத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வெள்ளிக்கிழமையன்று அமெரிக்க வெளியுறவு செயலர் ரெக்ஸ் தில்லர்சன் அழைப்பு விடுத்தப் பின்னர், கத்தார் மீதான இந்த தடையால் ஏற்படும் மனிதநேய பாதிப்புக்களை குறைக்க மேற்கொள்ளப்பட்டுள்ள முதலாவது முக்கிய நடவடிக்கை இதுவாகும்.

வளைகுடா உடையுடன் ஒருவர்படத்தின் காப்புரிமைAFP

சர்வதேச அரங்கில் தங்கள் கருத்துகளுக்காக போராட அமெரிக்காவின் முன்னாள் அமெரிக்க அட்டர்னி ஜெனரல் ஜான் அஷ்குரோஃப்டை கத்தார் அமர்த்தியுள்ளது.

இந்த பிராந்தியம் இயல்பான நிலைமைக்கு திரும்பும் என்றும், தற்போதைய பிரச்சனை 2022 ஆம் ஆண்டு கத்தாரில் நடைபெறும் உலக கால்பந்து கோப்பை போட்டிகளை நடத்துவதை பாதிக்காது என்று நம்பிக்கையோடு இருப்பதாகவும், சர்வதேச கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் ஜானி இன்ஃபென்டீனோ தெரிவித்திருக்கிறார்.

கத்தாரின் அறக்கொடைகளை கண்காணிக்கின்ற “அறக்கொடை செல்பாடுகளின் ஒழுங்காற்று நிர்வாகம்” ஆயுதப்படைகளுக்கு நிதி ஆதரவு அளிப்பதில் எதிலும் ஈடுப்படவில்லை என்று தெரிவித்திருக்கிறது. கத்தாரின் மனிதநேய நிறுவனங்கள் தீவிரவாதத்தை ஆதரிப்பதாக குற்றஞ்சாட்டுவதை கண்டிப்பதாக அது தெரிவித்திருக்கிறது. (bbc)

Web Design by The Design Lanka