'ஷோகம்" இற்கு செலவுசெய்த பணத்தை அறவிடும் முயற்சியில் அரசாங்கம் : திஸ்ஸ - Sri Lanka Muslim

‘ஷோகம்” இற்கு செலவுசெய்த பணத்தை அறவிடும் முயற்சியில் அரசாங்கம் : திஸ்ஸ

Contributors

அரசாங்கம் அத்தியாவசியப் பொருட்களின் வரிகளை அதிகரித்து ‘ஷோகம்” ற்கு செலவுசெய்த பணத்தை அறவிடும் முயற்சியில் இறங்கியுள்ளது. அதற்கு விஷேட வர்த்தக பொருட்கள் மீதான வரி என்ற பெயர் சூட்டப்பட்டு சூட்சுமமாக மக்களை நெருக்கடியில் தள்ளியுள்ளதென ஐக்கிய தேசியக் கட்சி எம்.பி. திஸ்ஸ அத்தநாயக்க இன்று சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி. இதனைத் தெரிவித்தார்.
சபையில் அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
பொதுநலவாய மாநாட்டுக்கென செலவு செய்யப்பட்ட தொகை என்ன என்பதை அரசாங்கம் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் பகிரங்கப்படுத்தவில்லை.
மாநாட்டில் கலந்துகொண்ட தலைவர்கள் பயணிப்பதற்காக 54 எஸ்.400 பென்ஸ் கார்கள் கொள்வனவு செய்யப்பட்டன.
இக் கார்கள் அனைத்தும் ஏதோ ஒரு நிறுவனத்தால் தீர்வையற்ற முறையில் இங்கு கொண்டுவரப்பட்டன. தீர்வையற்ற முறையில் இங்கு கொண்டுவருவதற்கு அரசாங்கம் தான் நடவடிக்கை எடுத்துள்ளது.
கார்கள் இறக்குமதி செய்யப்பட்டமை உட்பட பொதுநலவாய மாநாட்டுக்கு செலவு செய்யப்பட்ட அனைத்து செலவுகளையும் நிவர்த்தி செய்து கொள்வதற்காக விசேட வர்த்தகப்பொருட்கள் மீதான வரி என்ற பெயரில் ஆயிரத்து 288 கோடி ரூபாவை நாட்டு மக்களிடமிருந்து அறவிடுவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது.(vk)

Web Design by Srilanka Muslims Web Team