ஸ்ரீதரன் தேசத் துரோகி! அவரைக் கைது செய்யுங்கள்! பொதுபல சேனா - Sri Lanka Muslim

ஸ்ரீதரன் தேசத் துரோகி! அவரைக் கைது செய்யுங்கள்! பொதுபல சேனா

Contributors

சிங்களவர்களின் உரிமைகளுக்காகவும் சுதந்திரத்திற்காகவும் மீண்டும் ஒரு முறை போராட வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளதாக கடும்போக்கு பௌத்த அமைப்பான பொதுபல சேனாவின் செயலாளர் கலகொட அத்தோஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

கிருலப்பனையிலுள்ள பொதுபல சேனாவின் தலைமைக் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு, வடக்கில் தமிழ் கூட்டமைப்பின் நிலைப்பாடு குறித்துக் கருத்துத் தெரிவிக்கையிலேயே தேரர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஸ்ரீதரன் எம்.பி. புலிகளின் தலைவர் பிரபாகரனைப் புகழ்ந்து உரையாற்றியதனால், அவர் தேசத் துரோகியாக மாறியுள்ளதாகவும், அவரை உடனடியாகக் கைது செய்யுமாறும் தேரர் மேலும் கூறியுள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team