ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன லொகான் ரத்வத்தையின் கட்சி உறுப்புரிமையை இரத்துச்செய்யவேண்டும் - மார்ச் 12 இயக்கம்..! - Sri Lanka Muslim

ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன லொகான் ரத்வத்தையின் கட்சி உறுப்புரிமையை இரத்துச்செய்யவேண்டும் – மார்ச் 12 இயக்கம்..!

Contributors

ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன லொகான் ரத்வத்தையின் கட்சி உறுப்புரிமையை இரத்துச்செய்யவேண்டும் என மார்ச் 12 இயக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. அவரது நடவடிக்கை குறித்து விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் எனவும் மார்ச் 12 இயக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. சிறைச்சாலை ஆணையாளர் மேற்கொள்ளும் விசாரணைகள் குறித்து மக்களிற்கு நம்பிக்கை ஏற்படாது என மார்ச் 12 இயக்கத்தின் ஏற்பட்டாளர் ரோகண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.


அரசியல் கட்சிகளின் தலைவர்களின் அமைதியான அணுகுமுறை நாட்டில் அவமானகரமான பிழையான அரசியல் கலாச்சாரம் உருவாவதற்கு காரணமாக அமைந்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவை லொகான் ரத்வத்தையின் கட்சி உறுப்புரிமையை இரத்துச்செய்யவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சர்வதேச அளவில் இலங்கைக்கு அவமானம் ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களிற்கு எதிரான அவசியமான நடவடிக்கைகளை அரசாங்கத்தின் தலைவர்களும் அரசியல் தலைவர்களும் எடுக்கவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team