ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம்: ஏறாவூர் நகர சபை » Sri Lanka Muslim

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம்: ஏறாவூர் நகர சபை

unp

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

(S.சஜீத்)


உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய தேசிய கட்சி கூட்டு இணைந்து ஏறாவூர் நகர சபையில் ஆட்சி அமைத்தவுடன் எவ்வாறு ஏறாவூர் மண்ணை தமது ஆட்சியின் கீழ் மாற்றியமைப்பது தொடர்பான விஞ்ஞாபன வெளியீட்டு நிகழ்வு இன்று (12) முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் காரியாலத்தில் ஹாபீஸ் நசீர் அஹமட் அவர்களின் அரசியல் தலைமைத்துவத்தின் கீழ் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினர்கள் முன்னிலையில் முன்னாள் முதலமைச்சர் இணைப்புச் செயலாளரும் முன்னாள் நகரசபை தவிசாளருமான நாசர் ஆசிரியர்
அவர்களின் தலைமையில் இடம் பெற்ற போது.

எழுச்சியை நோக்கிய ஏறாவூர்
(தேர்தல் விஞ்ஞாபனம் ஏறாவூர் நகர சபை)
===============================================

01. ஏறாவூர் நகர சபையை நாட்டின் அதி சிறந்த மாநகர சபையாக தரமுயர்த்துதல்.

02. சர்வதேச தரத்தில் அதி சிறந்த தொழிற்பேட்டை உருவாக்கி வீட்டுக்கொருவர் வீதம் வேலைவாய்ப்பு வழங்குதல்.

03. முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமத் அவர்களால் 1350 கோடி ரூபா நிதியில் கொண்டுவரப்பட்ட வடிகாலமைப்பும் அதன் மூலம் கழிவு நீர் அகற்றல் திட்டத்தை நடைமுறைப்படுத்தல்.

04. 30 கோடியில் ஆரம்பிக்கப்பட்ட பிரமாண்டமான அதி நவீன சந்தை சதுக்கம் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டு சரியான முறையில் வியாபாரிகளுக்கு கடைகள் பகிர்ந்தளிக்கப்படுவதோடு மக்கள் பயன்பாட்டுக்கான நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும்.

05. பொதுச் சந்தைக்கான காணிகளை வழங்கிய பள்ளிவாயல்களின் ஒப்பந்தங்களுக்கு அமைவாக வாடகைகள் நிலுவையின்றி வழங்கப்படும்.

06. 20 கோடி நிதியில் 2000 பேர் அமரக்கூடிய மிகப் பிரமாண்டமான திருமண மண்டபம் அடங்கலான கலாச்சார மண்டபம் மற்றும் நவீன வாசிகசாலைக் (Library) கட்டடத்தைப் பூர்த்தி செய்தல்.

07. ஏறாவூர் ஆற்றங்கரை ஊடாக படுவாங்கரைக்குச் செல்ல ஆற்று வழிப்பாதை (ferry) ஏற்படுத்தல்.

08. சகல வசதிகளும் கொண்ட சர்வதேச தரத்திலான விளையாட்டு மைதானம் ஒன்றை நிறுவுதல்.

09. ஏறாவூரில் உள்ள முக்கிய நிறுவனங்களுக்கு பள்ளிவாயல் முஸ்லீம் நிறுவனங்களின் சம்மேளணம், ஜம்மியதுல் உலமா, வர்த்தகர் சங்கம், தாய் சேய் சிகிச்சை நிலையம், காதி நீதிமன்றம், மத்தியஸ்த சபை (இணக்கசபை) ஆகியவற்றுக்கான நிரந்தர அலுவலகங்களை வழங்குதல்.

10. ஏறாவூர் நகர சபையில் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட ஊழியர்களை நிரந்தரமாக்குவதுடன் புதிய ஆளணிகளை உருவாக்கி புதிய நியமனங்கள் வழங்கல்.

11. ஏறாவூர் நகர சபையில் இலஞ்சம், ஊழல், ஏமாற்று இல்லாத நல்லாட்சியை உருவாக்குதல்.

12. அதிக வரிகளில்லாத முறையிலும் சில வரிகளைக் குறைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் சிறுவர் பூங்காக்களில் அறவிடப்படும் கட்டணங்கள் முற்றாக நிறுத்துதல்.

13. ஏறாவூர் நகரத்தில் இருக்கும் சகல வீதிகளும் சரியான பொறியியலாளர்களின் கண்காணிப்பில் பரிசீலனை செய்யப்பட்டு நேர்த்தியான வடிகான்களுடன் வீதிகளைப் புனரமைத்தல்.

14. திண்மக்கழிவகற்றல் திட்டம் நேர்த்தியாக மேற்கொள்ளப்படுவதுடன் அதற்கான கண்காணிப்புக்களும் அமுல்படுத்துதல்.

15. எமது பிரதேசத்திற்கான நவீன தொழிநுட்ப முறையிலான (Slaughterhouse) மடுவம் நிறுவப்பட்டு சுகாதார முறையில் பரிபாலனம் செய்தல்.

16. ஒவ்வொரு வட்டாரத்துக்கும் அங்குள்ள வறிய சிறுவர் சிறுமிகளின் நலன் கருதி கற்றல் உபகரணங்களுடன், மார்க்கக் கல்வியுடனான நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பாலர் பாடசாலைகள் நிறுவப்பட்டு முற்றிலும் இலவசக் கல்வி மேற்கொள்ளல்.

17 வருமானம் குறைந்த குடும்பங்களில் உள்ள மாணவர்களுக்கு கல்வி ஊக்குவிப்புத் தொகை வழங்க நடவடிக்கை எடுத்தல்.

18. எமது ஊரில் உள்ள விதவைப் பெண்கள், அநாதைச் சிறுவர்கள், வறியவர்கள், விஷேட தேவையுடையோர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கான சுயதொழில், வாழ்வாதாரம் போன்ற உதவிகள் வழங்க நடவடிக்கை எடுத்தல்.

19. விளையாட்டுக் கழகங்களை ஊக்குவித்து தேசிய தரத்துக்கு வீரர்களைத் தயார்படுத்த நடவடிக்கை எடுத்தல்.

20. மலசல கூட வசதிகளற்ற குடும்பங்களுக்கு முறையான மலசல கூடங்கள் அமைத்துக் கொடுத்தல்.

21. குடி நீர் வசதியில்லாத சகல இடங்களுக்கும் உடனடியாக சுத்தமான குடிநீர் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்தல்.

22. போதைப் பொருள் பாவனையை ஒழித்தல்.

23. ஒவ்வொரு வட்டாரத்திலும் உள்ள இளைஞர்கள் மற்றும் வயோதிபர்களை வாசிப்பின் பக்கம் ஊக்கு விக்க வாசிகசாலைகளை அபிவிருத்தி செய்தல்.

24. ஏறாவூர் நகர அழகுபடுத்தலை சரியான கண்காணிப்பில் மிகச்சிறப்பாக நடைமுறைப்படுத்தல்.

25. ஏறாவூர் நகரத்தில் இருந்து பல இடங்களுக்கும் செல்லக்கூடிய போக்குவரத்து பஸ் நிலையம் அமைத்தல்.

26. சகல வசதிகளும் கொண்ட நவீன சிறுவர் பூங்காக்கள் உருவாக்கல்.

27. பெண்களுக்கு தனியாக உடற்பயிற்சிக்கான நடை பாதை அமைத்தல்.

28. பெண்களுக்காக 2.5 கோடியில் கட்டி முடிக்கப்பட்ட பெண் சந்தையின் கடைகளை குறைந்த வாடகையில் வியாபாரங்களுக்கு வழங்குதல்.

29. டெங்கு ஒழிப்பினை சிறந்த முறையில் மேற் கொண்டு டெங்கற்ற நகரமாக மாற்றுதல்.

30. நமது நகரில் எந்த யாசகர்களும் யாசகம் கேட்கக் கூடாது என்பதற்காக அவர்களுக்கான சுய தொழில் கட்டாயம் ஏற்பாடு செய்தல்.

31. நகரின் பிரதான வீதிகளில் இரவு நேரங்களில் திண்மக்களிவகற்றல் மற்றும் நகர்ப்புற வீதிகளைச் சுத்தம் செய்தலை மேற்கொள்ளல்.

32. நகர திட்டமிடல் அதிகார சபைக்கு வழங்கப்பட்டிருக்கும் அதி உச்ச அதிகாரங்களை மீள் பரிசீலனை செய்து மட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதன் மூலம் கட்டுமான அனுமதியினை பெறுவதிலும் வீதிச்சான்றிதல் பெறுவதிலும் ஏற்படும் காலதாமதம் மற்றும் தடங்களை இல்லாதொழித்தல்.

33. பிரதான வீதிகளைக் கடக்கும் மாணவர்கள் மற்றும் பாதசாரிகளின் நன்மை கருதி மேம்பாலம் அமைத்தல்.

34. பொது அடக்கஷ்த்தலங்களை நகரசபையின் ஆட்சிக்குட்படுத்தி ஆளணிகளை உருவாக்கி பராமரித்தல்.

35. வினைத்திறனும், செயற்திறனும் மிக்க நிருவாகத்தை உருவாக்கி மக்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளைச் சரியான நேரத்துக்கு செய்து கொடுத்தல்.
மக்களுக்கான ஆட்சியே மக்களாட்சி.

Web Design by The Design Lanka