ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளராக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக் நியமிப்பு..! - Sri Lanka Muslim

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளராக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக் நியமிப்பு..!

Contributors

எப்.முபாரக் 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளராக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக் இன்று (01) ஞாயிற்றுக்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பினை அக்கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், திருகோணமலை மாவட்டத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது மேற்கொண்டிருந்தார்.

கடந்த பல வருடங்களாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளராக செயற்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சபீக் ரஜாப்தீன் அண்மையில் ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்துகொண்டார்.

இதனையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கே பாராளுமன்ற உறுப்பினர் தௌபீக் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team